பசுபதி பாண்டியன் -9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சட்ட மக்கள் உரிமை அமைப்பு தலைவர் வக்கீல் ரமேஷ் பாண்டியன் ,அவரது சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி 2021 ஜனவரி 10 ;பசுபதி பாண்டியன் -9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சட்ட மக்கள் உரிமை அமைப்பு தலைவர் வக்கீல் ரமேஷ் பாண்டியன் ,அவரது சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தேவேந்திரகுல வேளாளர் தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த 10-1-2012 --ல் திண்டுக்கலில் நந்தனம் பட்டியில் கொலைசெய்யப்பட்டார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மேல அலங்காரத் தட்டு பகுதியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.இங்கு வருடந்தோறும் அவரது நினைவு நாளில் குரு பூஜை,அன்ன தானம் பிரமாண்டமாக நடைபெறும். இதில் கலந்து கொள்ள தமிழக முழுவதும் உள்ள பசுபதி பாண்டியன் பற்றாளர்கள் வந்து வணங்கி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கொரோனா தொற்று மற்றும் 144 - சட்டம் அமுலில் தமிழக முழுவதும் உள்ளதால் இங்கு மற்ற மாவட்டங்களில் இருந்து வருவர்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று நினைவு நாளை முன்னிட்டு மறைந்த பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் இளைஞர்கள் ஏராளமானோர் நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பசுபதி பாண்டியன் -9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சட்ட மக்கள் உரிமை அமைப்பு தலைவர் வக்கீல் ரமேஷ் பாண்டியன் ,அவரது சமாதிக்கு வழக்கறிஞர்கள் குழுமத்துடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்.