Onetamil News Logo

பெரிய காலடி என்ற வெண்ணி காலாடி-க்கு அரசு விழாவாக அறிவிக்க கோரியும் ;மணிமண்டபம் கட்டக்  கோரியும் தமிழர் விடுதலைக் களம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் வே.காளிராஜ் தலைமையில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

Onetamil News
 

பெரிய காலடி என்ற வெண்ணி காலாடி-க்கு அரசு விழாவாக அறிவிக்க கோரியும் ;மணிமண்டபம் கட்டக்  கோரியும் தமிழர் விடுதலைக் களம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் வே.காளிராஜ் தலைமையில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி 2019 டிசம்பர் 2 ;பெரிய காலடி என்ற வெண்ணி காலாடி-க்கு அரசு விழாவாக அறிவிக்க கோரியும் ;மணிமண்டபம் கட்டக்  கோரியும் தமிழர் விடுதலைக் களம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் வே.காளிராஜ் தலைமையில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
இந்திய சுதந்திர போராட்ட வீரர் பெரிய காலடி என்ற வெண்ணி காலாடியார் நினைவு தினம் வரும் டிசம்பர் 20ம் தேதி நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. 
வெண்ணிக் காலாடி அல்லது பெரிய காலாடி ;                                                              வெண்ணிக் காலாடி அல்லது பெரிய காலாடி என்பவர் பூலித்தேவன் படையின் முக்கியத் தளபதியாக இருந்தவர். வெண்ணிக்காலாடி தேவேந்திர குலத்தில் காலாடி என்ற உட்பிரிவைச் சேர்ந்தவர். காலாடி என்ற பெயர் போர் படையில் காலாட்படை வீரர்களை குறிப்பதாகும்.
பூலித்தேவரை நேரில் சென்று எதிர்க்க முடியாது என்று எண்ணினார் கான்சாகிப், அதனால் இரவில் பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிடலாம் என்று தீர்மானித்து கான்சாகிப்பின் படைகள், காட்டில் முகாமிட்டிருந்த செய்தியை அறிந்த பெரிய காலாடி சில வீரர்களுடன் சென்று அம்முகாமைத் தாக்கினார். அப்போது எதிரி வீரன் ஒருவன் மறைந்திருந்து தாக்கியதால் காயமுற்றார் என்றாலும் வயிறு கிழிக்கப்பட்டு, குடல் வெளியே வந்த நிலையிலும், தான் தலைப்பாகையாகக் கட்டியிருந்த துண்டை எடுத்து, வெளியே வந்த தன் குடலை மீண்டும் வயிற்றுக்குள் தள்ளி, தன் வயிற்றைத் துண்டால் கட்டிக் கொண்டு எதிரிகளுடன் சண்டையிட்டு அவர்களை தோற்கடித்தார்.தான் எதிரிகளை தோற்கடித்ததையும், அவர்கள் படையுடன் காட்டில் சென்று பதுங்கியிருப்பதையும் தெரிவிக்க சூறாவளி காற்றைப்போல் தன் குதிரையை செலுத்தி பூலித்தேவரிடம் வந்தடைந்தார். பலத்த காயத்துடன் வந்த வெண்ணிக்காலாடியை பூலித்தேவர் தன் மடியில் கிடத்தி நடந்தவற்றை கேட்டுக்கொண்டிந்த நேரம், செய்தியை கூறிவிட்டு மரணம் அடைந்தார். 
இந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க கோரியும் அவரின் நினைவு இடத்தில் மணிமண்டபம் கட்டக்  கோரியும் தமிழர் விடுதலைக் களம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் வே.காளிராஜ் தலைமையில் தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதே போன்று திண்டுக்கல்,கரூர்,மதுரை,திருநெல்வேலி  ஆகிய மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட தமிழர் விடுதலை களம் நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo