Onetamil News Logo

IOCL நிறுவனத்திடம் இருந்து பொட்டல் காடு கிராமத்தை பாதுகாப்போம் ;தமிழர் விடுதலைக் களம் ,நிறுவனர் , ப .ராஜ்குமார் தகவல் 

Onetamil News
 

IOCL நிறுவனத்திடம் இருந்து பொட்டல் காடு கிராமத்தை பாதுகாப்போம் ;தமிழர் விடுதலைக் களம் ,நிறுவனர் , ப .ராஜ்குமார் தகவல் 


தூத்துக்குடி  2020 ஜூலை 13 ;IOCL நிறுவனத்திடம் இருந்து பொட்டல் காடு கிராமத்தை பாதுகாப்போம் என்று தமிழர் விடுதலைக் களம் ,நிறுவனர் , ப .ராஜ்குமார்   கூறியிருக்கிறார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...தூத்துக்குடி மாவட்டம், பொட்டல் காடு கிராம மக்கள் கடந்த ஓராண்டு காலமாக தங்கள் கிராமத்தின் நடுவே IOCL நிறுவனத்தினர் எரிவாயு குழாய் பதிப்பதை தடுத்து நிறுத்துவதற்கு தீவிரமாக போராடி வருகிறார்கள். 
மக்களுடைய எதிர்ப்பை பொருட்ப்படுத்தாமல் IOCL நிறுவனத்தினர் உள்ளூர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மூலமாக எரிவாயு குழாயை பதிக்க முயற்சிக்கிறது.
காவல்துறை மூலம் பொய் வழக்கு போடுவதாக விடப்பட்ட மிரட்டலுக்கு பயந்து பின்வாங்காமல், தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்நிலையில் மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் அமைதி கூட்டம் நடத்தப்பட்டு IOCL நிறுவனம் குழாய் பதிக்கும் வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இல்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று மக்கள் எச்சரித்ததின் அடிப்படையில் வேலைகள் நிறுத்தப்பட்ட சூழ்நிலையில் ,கடந்த 22.03.2020 அன்று தூத்துக்குடியில் இருக்கின்ற விவசாயபெருங்குடி மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கம், சமூக அமைப்புகள் எல்லாம் ஒன்றிணைந்து IOCL நிறுவனத்தின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பொட்டல் காட்டில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட சூழ்நிலையில் அரசு கொரோணா பாதிப்பால் ஊடரங்கு உத்தரவு பிறப்பித்ததால் ஒத்திவைக்கப்பட்டது. 
மேலும் நாடே கொரோணா பிடியில் இருந்து மீள போராடி கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட IOCL நிறுவனம் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் துணைக் கொண்டு மீண்டும் குழாய் பதிக்கும் வேலைகளை செய்து கொண்டு வருகிறது. மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சி தலைவரிடம் முறையீட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாய நிலத்தில் குழாய்  பதிப்பதினால்  விளை நிலங்களை பாதிக்கப்படும் என்று தெரிந்தும் கூட அரசு மக்கள் விரோத போக்கிற்கு துணை நிற்கிறது. IOCL  மக்களின் விருப்பத்திற்கு மாறாக காவல்துறையின் துணையோடு விவசாய நிலங்களில் குழாய் பதிப்பதை தமிழர் விடுதலைக் களம் வன்மையாக கண்டிக்கிறது . மேலும் IOCL நிறுவனம் பொட்டல் காடு விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும், தொடந்தால் தமிழர் விடுதலை களம் தமிழகம் முழுவதும் மக்கள் திரள் போராட்டம் நடத்தும் என்று எச்சரிக்கை செய்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo