Onetamil News Logo

பாபநாசம்,சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணை

Onetamil News
 

பாபநாசம்,சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணை


தூத்துக்குடி,2019 ஆகஸ்ட் 22 :திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பாசன வசதிக்காக  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ விவசாயிகளின் சார்பாக வைத்த கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் பாபநாசம் ,சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளார்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பாபநாசம் ; சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  மற்றும் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர்  15.8.2019 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து இப்பகுதி விவசாயிகளின் சார்பில் கோரிக்கை வைத்தார்கள். இக்கோரிக்கையினை ஏற்று  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22.8.2019 இன்று திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவாசயிகள் பாசன வசதிக்காகவும் கால்நடை மற்றும் பொது மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்திடவும் 26.8.2019 முதல் 14.9.2019 முடிய பாபநாசம,; சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து 1500 மில்லியன் கனஅடி விதம் தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளார்கள். இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்ட விவசாயிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், திருவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி வட்டங்களைச் சேர்ந்த 62,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. 
விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர்  கேட்டுக்கொண்டுள்ளார்கள். 
 
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo