கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்றம் சார்பாக திருவள்ளுவர் தினம் ; மாணவச்செல்வங்கள் பலர் குறள் ஒப்பித்தும் பாடல்களும் பாடினர்.
கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்றம் சார்பாக திருவள்ளுவர் தினம் ;மாணவச்செல்வங்கள் பலர் குறள் ஒப்பித்தும் பாடல்களும் பாடினர்.
தூத்துக்குடி 2021 ஜனவரி 17 ; கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்றம் சார்பாக திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது திருவள்ளுவர் மன்றத் தலைவர் கருத்தப்பாண்டி, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.செயலாளர் சீனிவாசன், அனைவரையும் வரவேற்றார் மன்ற உறுப்பினர் முனைவர் முருக சரஸ்வதி உறுதிமொழி வாசித்தார். மாணவச்செல்வங்கள் பலர் குறள் ஒப்பித்தும் பாடல்களும் பாடினர் . பங்குபெற்ற மாணவச் செல்வங்களுக்கு இலக்கிய உலா சார்பாக பரிசும சான்றிதழ்களும் வழங்கப்பட்டது... பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்களும் கவிஞர்களும் கலந்துகொண்டனர். துணைத்தலைவர் திருமலைமுத்துச்சாமி தொகுத்து வழங்கினார். .