Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலனுக்காகவும் தொற்றாநோய்கள் திட்டத்திற்காகவும் இரண்டாம் இடம் ; துணை இயக்குநர் சுகாதார பணிகள்,மரு. கீதாராணி,  சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலனுக்காகவும் தொற்றாநோய்கள் திட்டத்திற்காகவும் இரண்டாம் இடம்; துணை இயக்குநர் சுகாதார பணிகள்,மரு. கீதாராணி,  சான்றிதழை பெற்றுக்கொண்டார்.


தூத்துக்குடி 2019 டிசம்பர் 2 ;சென்னை எழும்பூர் குடும்ப நலத்துறை பயிற்சி அரங்கில் கடந்த 29ம் தேதி  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மரு.ஊ.விஐயபாஸ்கர்  தலைமையில் அரசு மருத்துவ
கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குநர்கள் மற்றும துணை இயக்குநர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைப் பெற்றது. 

 இக்கூட்டத்தில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன், தொற்றாநோய்கள், அனைவருக்கும் நல்வாழ்வு திட்டம் மற்றும்  மருத்துவமனைகளின் தரத்திற்கான சுகாதார குறியீடுகளில் சிறந்து விளங்கிய சுகாதார மாவட்டங்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அவற்றில் நமது தூத்துக்குடி மாவட்டம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலனுக்காகவும் மேலும் தொற்றாநோய்கள் திட்டத்திற்காகவும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. மேலும் தேசிய குழும இயக்குநரகத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி செலவினங்களுக்கு இரண்டாம்  இடம் நமது தூத்துக்குடி சுகாதார மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும குடும்ப நலத்துறை செயலாளர் மரு. பீலா ராஜேஷ், , தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் நாகராஜ்  தேசிய நலவாழ்வு குடும்ப இயக்குநர் மரு.செந்தில்ராஜ் மற்றும  துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இச்சான்றிதழை  துணை இயக்குநர் சுகாதார பணிகள்,மரு. கீதாராணி,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் சந்தீப் நந்தூரீஅவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo