Onetamil News Logo

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் நல்ல மழை பெய்து வெயிலின் தாக்கம் நீங்கவும், பசுமைவளம் சிறக்கவும் வேண்டி வருண ஜெபம் 

Onetamil News
 

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் நல்ல மழை பெய்து வெயிலின் தாக்கம் நீங்கவும், பசுமைவளம் சிறக்கவும் வேண்டி வருண ஜெபம் 


தூத்துக்குடி 2019 மே 19 ; தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் நல்ல மழை பெய்து வெயிலின் தாக்கம் நீங்கவும், பசுமைவளம் சிறக்கவும் வேண்டி வருண ஜெபம் நடைபெற்றது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே அய்யனடைப்பு ஸ்ரீ சித்தர் நகரில் தமிழகத்திலேயே மிக உயரமாக 11அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர், மங்களம் தரும் சனீீீஸ்வரர் சிலைகள் நிறுவப்பட்டு நாள்தோறும் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு அமாவாசை, அஷ்டமி நாட்களில் சிறப்பு யாகவழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி உலக மக்கள் அனைவரும் உடல்பிணிகள் நீங்கி நலமாக வாழவேண்டியும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நீீங்கவும், 
மழை நன்கு பெய்து பசுமை வளத்துடன் கூடிய விவசாயம் செழிக்கவேண்டியும், மக்கள் மனஅழுத்த நோய்களில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு வாழ்ந்திட வேண்டியும்  மஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு வருண ஜெப சிறப்பு யாகம் நடைபெற்றது.
மழை பெய்யவேண்டி நடந்த சிறப்பு யாகத்துடன் கூடிய ஜலகண்டேஸ்வர யாக வழிபாட்டில் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ  சற்குரு சீனிவாச சித்தர் ஸ்ரீமஹா குருமகாலிங்கேஸ்வரர் முன்பாக பெரிய  அண்டாவிற்குள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீருக்குள் அமர்ந்து தொடர்ந்து 12மணிநேர ஜல தவ சிறப்பு வழிபாடு செய்தார். அதனைத்தொடர்ந்து திருமஞ்சனம், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், பால், குங்குமம் உள்ளிட்ட 16வகையான அபிஷேகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகளும், தீபாரதணையும் நடந்தது.
சிறப்பு யாகம் மற்றும் வழிபாடுகளானது ஸ்ரீ சித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடந்தது. யாகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்தாண்டுகளில் பருவமழை சிறப்பாக பெய்திடவேண்டிய ஆலயத்தில் பாகற்காய், மிளகாய், வற்றல் யாகம் பிரமாண்டமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
சிறப்பு யாக வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு  சீனிவாச சித்தர் தலைமையில், சித்தர்பீடத்தினர், மகளிர் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo