Onetamil News Logo

காசநோய் பணியாளர்களின் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் 23ம் தேதி சென்னையில் நடைபெறுவதாக அறிவிப்பு  

Onetamil News
 

காசநோய் பணியாளர்களின் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் 23ம் தேதி சென்னையில் நடைபெறுவதாக அறிவிப்பு  


                                                       
சென்னை 14 ஜனவரி 15 ; காசநோய் பணியாளர்களின் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் சென்னை  எழும்பூரில் உள்ள  மாநில காசநோய் அலுவலகத்தில் (TANSACS), நடைபெறுவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காசநோய் பணியாளர்கள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் வீ.சுரேஷ்  கூறுகையில்,
அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
 வாழ்த்துகள் வெறும் வாயளவில் மட்டும் தான். எந்த பலனும் கிடைக்காமல் நம் பணியாளர்கள்  எந்த வகையில் தை திருநாளை தங்கள் குடும்பத்தோடு கொண்டாட முடியும்?
முடியும். "தை பிறந்தால் வழிபிறக்கும்" முன்னோர் மொழி.
"நாளை விடியும் என்பது நம்பிக்கை...! விடிந்தே ஆக வேண்டும் என்பதும் கட்டாயமாகிறது...!!
அதுபோல நமது கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை, அது நிறைவேறியே ஆகவேண்டும் என்பதும் கட்டாயமாகிறது.
நம் மாநில அலுவலகத்தினர், நம்முடைய அத்தியாவசிய கோரிக்கைகளை விரைந்து  நிறைவேற்றாமல், காலம் தாழ்த்தி வருகின்றனர்.
கடந்த 2018 மே மாதம், மாவட்டம் வாரியாக, மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்தது தொடங்கி 21.06.18 அன்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆகஸ்ட் வரை காத்திருந்தும் எந்த பதிலும் வராததால் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை 
செப்டம்பரில் அறிவித்தோம். 
போராட்டத்தை வலுப்படுத்த மண்டல ஒருங்கிணைப்பு கூட்டங்களை நடத்தினோம்.
ஆகஸ்ட் மாதம் நடந்த முத்தரப்பு கூட்ட பேச்சு வார்த்தையின்  கூட்ட அறிக்கைகளை மாற்றித் தந்தபடி, கோரிக்கைகளை செயல்படுத்துகிறோம்  எனக்கூறி செப்டம்பர் வரை காலம் கடத்தி, நம் போராட்டத்தை 60 நாட்கள் தள்ளிப்போட வைத்தனர்.
அக்டோபர் மாதத்தில், அண்டை மாநிலங்களுக்கு இணையான சம்பளம், இதர சலுகைகள் வேண்டி ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு  பயணிக்க வைத்தனர். அங்கிருந்நு சேகரித்து வந்த தகவல்களின் படி நமது கோரிக்கைகள் இன்று வரை நிறைவேற்றபடவில்லை.
கடந்த 24.12.2018 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் நம்பிக்கை அதிகமாய் துளிர்த்தாலும் இன்றுவரை இறுதி வடிவம் எட்டப்படவில்லை.
மேலும், கன்னியாகுமரி மாவட்ட துணை இயக்குநர் அவர்களின் தொடர் பணியாளர் விரோத போக்கையும் நம் சங்கம் சார்பில் தீர்வு காண விழைகின்றோம்.
250 நாட்களுக்கு மேலாக மனுக்களை தூக்கிக்கொண்டு ஓடுகிறோம். எதைநோக்கி போகின்றோம்? யாருடைய நலனுக்காக அலைந்துக்கொண்டிருகின்றோம்? 
இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது?
காத்திருத்தலினால் நம் நலன்கள் நசுக்கப்படுவதை உணர்கிறோம்.
முந்தைய காத்திருப்பு போராட்டத்தை கைவிடும் போதே நாம் கூடி எச்சரித்து, அறிவித்தது போலவே மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை அறிவிக்கிறோம். இம்முறை பின்வாங்க கூடாது என்ற தீரத்துடன்.
வருகின்ற 23 ஆம் தேதி மாநில காசநோய் அலுவலத்தில் நம் கோரிக்கைகளான............................
1) பணிநிரந்தரம்.
2) ஊதிய உயர்வு
3)பணி மாறுதல் ஊக்க தொகை
4) விபத்து &ஆயுள் காப்பீடு.
5)சிறுவிடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பு
6)ரிஸ்க் அலவன்ஸ்.
7) பண்டிகை-கால போனஸ்.
8)லாயல்டி போனஸ்.
9)இறந்த பணியாளர்களுக்கு முதல்வர் நிவாரண நிதி.
10) மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு
11) TA/DA
12)அனைவருக்கும் EPF ESI பலன் மற்றும்
13) கன்னியாகுமரி துணை இயக்குநர் (பொ) அவர்களின் பணியாளர் விரோத போக்கினை நிறுத்துதல் போன்ற அனைத்து 
 கோரிக்கைகளும் நிறைவேறும்
 வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவோம்..,
அனைத்து தோழர்களும்,மாவட்ட, மண்டல நிர்வாகிகளும் உணர்வோடு கலந்து கொள்வோம்.கோரிக்கைகளை வென்றெடுக்க உறுதிபூணுவோம்.
 முக்கிய குறிப்பு : 
நமது இந்த போராட்டமானது, வெறும் பணியாளர்களின் நலனை மட்டும் அடிப்படையாக கொண்டது அல்ல, அதையும் தாண்டி,  பாரத பிரதமர் அவர்களின் 2025 காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் திட்டத்தை அடிபடையாகக் கொண்டது.  பணியாளர்களின் அடிபடை தேவை நிறைவேறாமல், மன நிம்மதி இல்லாத சூழலில் நமது மத்திய அரசின் " காசநோய் இல்லா இந்தியா" என்ற திட்டம் எவ்வகையிலும் நிறைவேறாது என்பது மத்திய, மாநில அரசு மற்றும்  நிர்வாக இயக்குநர்கள் (இ.ஆ.ப) அவர்களுக்கு நன்கு தெரியும்.
எனவே மாவட்டத்தில் துணை இயக்குநர்கள் (காசம்) தடுக்க மாட்டார்கள், இதையும்தாண்டி தடை ஏற்படுத்தினால், தயங்க வேண்டாம். நான் எனது உரிமைகாகவும், எனது தேவைக்காகவும், நாட்டின் மக்களுக்காகவும், என் நாட்டு அரசின் நற்பெயருக்காகவும், நான் போராடுவேன் என்று கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo