Onetamil News Logo

14 புதிய அரசு பேருந்துகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார். 

Onetamil News
 

14 புதிய அரசு பேருந்துகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார். 


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 17 ; தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் திருநெல்வேலி  அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 14 புதிய அரசு பேருந்துகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் புதிய அரசு பேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி.,தலைமையில் இன்று (17.08.2019) நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, 8 அரசு விரைவு பேருந்துகளையும், 6 அரசு போக்குவரத்து பேருந்துகளையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும்,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  ,  அரசு விரைவு பேருந்துகளில் உள்ள படுக்கை வசதியுடன் இருக்கைகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன்  (திருவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திகுளம்), முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 
நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசியதாவது:-   அம்மா  ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தினார்கள்.  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் , தொடர்ந்து அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறார். அதனைத்தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக அதிக அளவிலான பேருந்துகளை இயக்கவும், பழைய பேருந்துகளை புதிய பேருந்துகளாக மாற்றவும், மேலும் புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து செயல்படுத்தி வருகிறார்கள். 
நமது மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு முதற்கட்டமாக 23 பேருந்துகளும், இரண்டாம் கட்டமாக 12 பேருந்துகளும் புதிதாக இயக்கப்பட்டது.  தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.135 கோடி மதிப்பில் 500 புதிய பேருந்துகளை இயக்கி வைத்தார்கள். அதில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 8 புதிய பேருந்துகளையும், திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 6 புதிய பேருந்துகள் என 14 பேருந்துகள் வழங்கப்பட்டது. இன்று துவக்கி வைக்கப்படுகிறது. இப்பேருந்துகளில்  தனியார் பேருந்துகளில் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளைபோல சாயும் வசதி (புஸ்பேக்) மற்றும் படுக்கை வசதிகள் அரசு பேருந்துகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்செந்தூர் முதல் மதுரை வழியாக சென்னை செல்லும் பேருந்து மற்றும் கோவில்பட்டி முதல் சென்னை செல்லும் பேருந்துகளில் படுக்கையுடன் இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதன்முதலாக திருச்செந்தூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக இராமநாதபுரம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, சிதம்பரம், பாண்டிசேரி வழியாக சென்னைக்கு புதிய பேருந்து இயக்கப்படுகிறது. இந்துக்கள் ராமேஸ்வரம் செல்லவும், கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி செல்லவும். முஸ்லீம்கள் நாகூர் செல்லவும்  இந்த பேருந்து மிகவும் பயனள்ளதாக இருக்கும். நீண்ட தூரம் பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்ய தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் பயண சிரமங்களை வெகுவாக குறைக்க முடியும். இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  அவர்கள் ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
        நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ராஜகோபால், அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி மேலாண்மை இயக்குநர் அம்பலம்பிள்ளை, அரசு போக்குவரத்து கழகத்தின் பிரிவு மேலாளர் அபிமன்யு, கோட்ட மேலாளர் கண்ணன், தூத்துக்குடி பிரிவு மேலாளர்கள் பாஸ்கரன், சுரேஷ், உதவி ஆணையர் (மேற்கு பகுதி) ராமச்சந்திரன், முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார்,  ரமேஷ், டேக்ராஜா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo