Onetamil News Logo

தூத்துக்குடியில் திறந்தவெளியில் 2000 பேர் மலம் கழிக்கும் அவலம் ;  தூய்மை இந்தியா திட்டம் யாருக்கு? 

Onetamil News
 

தூத்துக்குடியில் திறந்தவெளியில் 2000 பேர் மலம் கழிக்கும் அவலம் ;  தூய்மை இந்தியா திட்டம் யாருக்கு?   


 தூத்துக்குடி 2019 அக்டோபர் 19 ;தூத்துக்குடியில் திறந்தவெளியில் 2000 பேர் மலம் கழிக்கும் அவலம் நடந்துவருகிறது.ஆனால் 90 சதவீதம் அதிகாரிகள் சம்பளத்திற்கு தான் பணிசெய்கின்றனர்.தூய்மை இந்தியா திட்டம் யாருக்கு?  உண்மையாக   தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? 
தூத்துக்குடி  துறைமுக குடியிருப்பில் 2 பேர்களுக்கு  டெங்கு காச்சல் வருவதற்கான முதல் காரணம் தூத்துக்குடி துறைமுக. குடியிருப்பு அருகில் லேபர் காலனி அமைந்து உள்ளது 
 தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் லேபர் காலனி உள்ளது.இதன் அருகில் வட இந்தியர்கள் தங்கியிருக்கும் செட்டுக்கள் உள்ளன.இதில் சுமார் 2000 பேர் தங்கியிருந்து வேலைக்குச் செல்கின்றனர்.இவர்கள் தங்கியிருக்கும் பகுதியில்  பொதுக்கழிப்பிடம் 15 மட்டும் உள்ளன.அங்கு சுகாதரம் கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்தப்பகுதியில் உள்ளவர்கள்  காலை 6 மணி முதல் 7.30 வரை முள் புதர்களில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம்  தான் நடந்து வருகிறது..இதனால்,வட இந்தியர்கள் ஒரு லிட்டர் பாட்டிலில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள காடுகளுக்கு திறந்தவெளியில் மலம் கழித்து வறுகிறார்கள்.பின்னர் 1 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டல்களில் தண்ணீர் கொண்டு சென்று சுத்தம் செய்து கொண்டு வந்து விடுகின்றனர் 
 இந்தப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட நாய்கள் மலக்கழிவுகளை தின்று வருவதாகவும் அப்பகுதினர் தெரிவிக்கின்றனர்..   

பாரதபிரதமர் நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய அரசு 'ஸ்வச் பாரத்' (தூய்மை இந்தியா) திட்டத்தில் அதிக கவனம் செலுத்தியது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்படும் என உறுதியளித்தது. தற்போது 90% இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி கிடைத்துள்ளது. ஆனால் பாரதபிரதமர் நரேந்திர மோதி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014-ம் ஆண்டு வரை 40% இந்தியர்களுக்குத் தான் கழிப்பறை வசதி இருந்தது என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.மனித மலம் ஆபத்தானது. 
ஒரு கிராம் மனிதக் கழிவில் ஒரு லட்சம் கோடி வைரஸ்களும் பாக்டீரியாக்களும் உள்ளன.  நாட்டில் மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதால், ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழலில் கோடி கோடியாக பாக்டீரியாக்களும் வைரஸ்களும் கலக்கின்றன. இதுதான் நோய்கள் பரவுவதற்கான, முக்கிய காரணியாக உள்ளது. 
வருடத்திற்க்கு ஒரு முறை சுத்தமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று எல்லா உயர் அதிகாரிகளும் போட்டோக்கு போஸ் கொடுத்து விட்டு அந்த கூட்டத்தில் வந்த பொது மக்களுக்கு ஒரு துப்பரவு செய்யும் விலக்குமாறு கொடுத்து விட்டு செல்வதையே வழக்கமாக வைத்து உள்ளனர் இந்த நிலைமை நீடித்தால் தூத்துக்குடி மக்கள் அணைவரும் டெங்கு காச்சலால் பாதிக்க பட்டு பேரளிவு ஏற்படும் இதை மாநகராட்சி தடுக்கும் முயற்சி எடுக்க வேண்டும் என்று அப் பகுதி மக்கள் விரும்புகின்றனர்.


 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo