Onetamil News Logo

தூத்துக்குடி அருகே உள்ள ஒட்டப்பிடாரத்தில்  1,039 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  ஒரு புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும் 

Onetamil News
 

தூத்துக்குடி அருகே உள்ள ஒட்டப்பிடாரத்தில்  1,039 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  ஒரு புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும் 



சென்னை ,2018  ஜுன். 12 ;தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் 
தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்கு மின்சாரம் பெரும் பங்கு வகிக்கிறது. எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, மின் திட்டங்களைத் தீட்டி, தமிழ்நாட்டின் மின் நிறுவுத் திறனை கணிசமாக அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல், அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில்  அம்மா  பல தொலைநோக்கு திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தினார்கள்.  அதனால், இன்றும், என்றும்,  தமிழ்நாடு ஒரு மின்மிகை மாநிலமாக திகழும் என்பதில் ஐயமில்லை.  நடப்பாண்டில், எரிசக்தித் துறையால்  மேற்கொள்ளப்பட உள்ள புதிய மின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் பற்றி இந்த அவையில் அறிவிக்கிறேன்.
1.  தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களில் 5 ஆயிரத்து 68 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 25 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். 
 அ) ஆரல்வாய் மொழி பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளி கொணர்வதற்காக, திருநெல்வேலி மாவட்டம்  சமூகரெங்கபுரத்தில் ஒரு புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். 
ஆ) கடலூர் மாவட்டம் நெய்வேலி, சிவகங்கை மாவட்டம்,  கோந்தகை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம்,   பரலி ஆகிய இடங்களில் மொத்தம் மூன்று  புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 1,669 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.  
இ) உடன்குடி அலகு - 1,  2,660 மெகாவாட் அனல் மின் நிலையத்தில்  உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றவும்,  2.150 மெகாவாட் இந்த்  பாரத்  அனல் மின் நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றவும் மற்றும் புதிய காற்றாலை மற்றும்  சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றவும்,  தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில்  1,039 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  ஒரு புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.  
ஈ) சென்னை மாநகரத்தின் மின் கட்டமைப்பை மேம்படுத்த, சென்னை மாவட்டத்தில் கணேஷ் நகர் மற்றும்  கே.கே.நகர்,  திருவள்ளூர் மாவட்டத்தில்  ஆவடி மற்றும் எண்ணூர்;   காஞ்சிபுரம் மாவட்டத்தில்   மறைமலை நகர் மற்றும் பல்லாவரம்; ஆகிய ஆறு இடங்களில் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 932 கோடியே 78 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் அமைக்கப்படும்.  
உ) மதுரை மாவட்டத்தில் கே.புதூர், திருநெல்வேலி மாவட்டத்தில் ராஜகோபாலபுரம், திருப்பூர் மாவட்டத்தில் கலிவேலம்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்தில்  எடப்பாடி என மொத்தம் நான்கு  230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 716 கோடியே 84 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் அமைக்கப்படும்.  
ஊ) திருவண்ணாமலை மாவட்டத்தில் காரப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்தளுர்; நாகை மாவட்டத்தில் ஆச்சாள்புரம்,  வேலூர் மாவட்டத்தில் மேல்பாடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், தருமபுரி மாவட்டத்தில் இலக்கியம்பட்டி, திருப்பூர் மாவட்டத்தில் பணப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சின்னதடாகம், மதுரை மாவட்டத்தில் தானியமங்கலம் மற்றும் மாணிக்கம்பட்டி ஆகிய 10 இடங்களில்  110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 110 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.  
2. தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு நீர்த் தேக்கங்களில் 
நீர் ஆவியாவதை தடுக்கவும் மற்றும் சூரிய சக்தி கட்டாய கொள்முதல் அளவை அதிகரிக்கவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும், இந்திய சூரியசக்தி கழகமும் இணைந்து முதன்முறையாக 250 மெகாவாட் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்களை 1,125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாத்தியக்கூறின் அடிப்படையில் அமைக்கப்படும்.  
3. 65 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மோயாறு புனல் மின் நிலையத்தின் ஆயுட் காலத்தை மேலும் 
25 ஆண்டுகள் நீட்டிப்புச் செய்திடவும், நிறுவு திறனை 3ஒ12 மெகாவாட்டிலிருந்து 3ஒ14 மெகாவாட்டாக அதிகப்படுத்திடவும், 67 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.  
4. 2023-ஆம் ஆண்டு சூரிய எரிசக்தியில் 8,884 மெகா வாட் திறனை அடைவதற்கு ஏதுவாக """"சூரிய எரிசக்திக் கொள்கை 2012"" மாற்றி அமைக்கப்படும்.  இதன் மூலம், தமிழ்நாடு சூரிய எரிசக்திக் கொள்கை 2012, 
மாண்புமிகு அம்மா அவர்களின் தமிழ்நாடு தொலை நோக்குப் பார்வை 2023 மற்றும் தேசிய சூரிய இயக்கம் ஆகியவற்றின் நோக்கங்கள் ஒருங்கிணைக்கப்படும்.  
5.  அம்மா  தமிழ்நாட்டுக்கு வழங்கிய தொலைநோக்கு பார்வை 2023 ஆவணத்தின் படி, உயர்ந்த பொருளாதார மற்றும் சமூக குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், புதிய எரிசக்தி கொள்கை ஒன்று உருவாக்கப்படும். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo