Onetamil News Logo

வெளிநாட்டில் சம்பளம் இல்லாமல் தவிக்கும் தமிழர்கள் ;தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கொடியன்குளம் மக்கள் கலெக்டர்-யிடம்  கோரிக்கை 

Onetamil News
 

வெளிநாட்டில் சம்பளம் இல்லாமல் தவிக்கும் தமிழர்கள் ;தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கொடியன்குளம் மக்கள் கலெக்டர்-யிடம்  கோரிக்கை 


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 18 ;வெளிநாட்டில் சம்பளம் இல்லாமல் தவிக்கும் தமிழர்கள் ;தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கொடியன்குளம் மக்கள் கலெக்டர்-யிடம்  கோரிக்கையை தெரிவித்தனர்.  
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். 
கொடியன்குளத்தை சேர்ந்த கே.இந்திரா, ஐ.இந்திரா, வேலம்மாள், நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், கூறியதாவது...  எங்களின் கணவர்கள் 4 பேரும் மஸ்கட் நாட்டில் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அங்கு கடந்த பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் இந்தியா வரமுடியாமல் அங்கு தவித்து வருகிறார்கள். எனவே அவர்களை பத்திரமாக அழைத்து வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo