Onetamil News Logo

இளம்பெண் 3 வயது குழந்தையுடன் மாயம்: போலீஸ் விசாரணை

Onetamil News
 

இளம்பெண் 3 வயது குழந்தையுடன் மாயம்:போலீஸ் விசாரணை


தூத்துக்குடி 2019 மே 16:  எட்டையபுரம் அருகே ரேஷன் கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற இளம்பெண் குழந்தையுடன் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம்,எட்டையபுரம் அருகே உள்ள சோழபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி விஜயலெட்சுமி (37). இந்த தம்பதியருக்கு சக்தி ஹரஹரன் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி காலையில் விஜயலெட்சுமி ரேசன் கடைக்கு செல்வதாக தனது மகனுடன் சென்றார். அதன் பின் அவர் வீடுதிரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முருகேசன் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் எப்போதும் வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo