Onetamil News Logo

நேற்று பெய்த மழைநீா் செல்லமுடியாமல் திருச்செந்தூா் பிரதான சாலைகளிலும் வாா்டு தெருக்களிலும் தேங்கி ஆறு குளம் போல காட்சியளிக்கிறது. 

Onetamil News
 

நேற்று பெய்த மழைநீா் செல்லமுடியாமல் திருச்செந்தூா் பிரதான சாலைகளிலும் வாா்டு தெருக்களிலும் தேங்கி ஆறு குளம் போல காட்சியளிக்கிறது. 


தூத்துக்குடி 2020 அக்டோபர்  1: தூத்துக்குடியில் மழைநீருடன் வீடுகளில் புகுந்த கழிவுநீா் சுகாதார சீா்கேடு ஏற்படும்முன் நடவடிக்கை எடுக்க கோாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் மாநகர தெற்கு பகுதியி்ல் நேற்று மாலை திடிரென ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது 
அந்த மழைநீா் செல்ல வழி இல்லாததால் சாலை தெருக்களில் தேங்கி நிற்கிறது.பொதுவாக தெற்கு மண்டலத்தில் உள்ள வாா்டுகளில் வடிகால்கள் இல்லாமல் உள்ளது.மேலும் அத்திமரப்பட்டி  முத்தையாபுரம் ஆகிய இரு ஊராட்சிகளால் அமைக்கப்பட்டிருந்த வடிகால்கள்  நூறு சதவீதம் ஆக்கிரமித்து மணலால் மூடப்பட்டுள்ளது,
இதனால் நேற்று பெய்த மழைநீா் செல்லமுடியாமல் திருச்செந்தூா் பிரதான சாலைகளிலும் வாா்டு தெருக்களிலும் தேங்கி ஆறு குளம் போல காட்சியளிக்கிறது. இதில் முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருக்களில் மழைநீா்  கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
இந்த தெருவிலும் வடிகால்கள் முழுமையாக ஆக்கிரமிப்பில் உள்ளது குறிப்பிடதக்கது. 
இதனால் அப்பகுதியில் தூா்நாற்றம் வீசி வருகிறது.இதன்மூலம் மாநகர தெற்கு மண்டலத்தில்  சுகாதார சீா் கேடு தொற்று நோய்கள் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேர மழைக்கே இந்த நிலைமை என்றால் தொடா் மழை பெய்தால் பொதுமக்களின் நிலைமை மிகவும் கேள்விகுறியாக மாறும் ஆபத்து உள்ளது.எனவே கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபடாத நிலையில் மாநகாில் சுகாதார சீா்கேடு நோய்பரவினால் மிகப் பொிய பாதிப்பு ஏற்படும்.எனவே மாநகராட்சி கமிஷனா் ஜெயசீலன் ,இது குறித்து ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்று தூத்துக்குடி பாராளுமன்ற இளைஞா் காங்கிரஸ் முன்னாள் தலைவா் எஸ்.எம்.சகாயராஜ்.மற்றும் பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo