Onetamil News Logo

ஓட்டப்பிடாரம் தீயணைப்பு வீரர் சென்ற பைக் மீது லாரி மோதி பலி   

Onetamil News
 

ஓட்டப்பிடாரம் தீயணைப்பு வீரர் சென்ற பைக் மீது லாரி மோதி பலி   


தூத்துக்குடி 2019 செப் 19 ; ஓட்டப்பிடாரம் தீயணைப்பு வீரர் சென்ற பைக் மீது லாரி மோதியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 
 தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் மேட்டு காலனியைச் சேர்ந்தவர் அழகர் இவரது மகன் மகேந்திரன் (22). இவர் ஓட்டப்பிடாரத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று மாலையில் தீயணைப்பு நிலைய அலுவலக தொடர்பாக அவரது பைக்கில் தூத்துக்குடிக்கு  வந்துள்ளார். அதன் பின்னர், தூத்துக்குடியில் வேலையை முடித்து விட்டு ஓட்டப்பிடாரம் நோக்கி அவரது பைக்கில் சென்று கொண்டிருந்தார். 
இந்நிலையில் தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள புதூர் பாண்டியாபுரம்  விலக்கில் உள்ள  சாலையில் மோட்டார் சைக்கிளை ஒட்டி திரும்பும் போது தீடீரென்று வ.உ.சி. துறைமுகத்திலிருந்து மதுரையை  நோக்கிச் சென்ற சரக்கு ஏற்றிய கண்டய்னர் லாரி தீயணைப்பு வீரர்  பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி அடிபட்டு அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.ஆனால்  பலத்த காயம் அவர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து புதியம்புத்தூர் காவல்நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo