Onetamil News Logo

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்(TNHSPGTA );தூத்துக்குடி மாவட்ட தலைமை அலுவலகம் திறப்புவிழா ;மாநிலத் தலைவர் இரா.இளங்கோவன் திறந்து வைத்தார். 

Onetamil News
 

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்(TNHSPGTA );தூத்துக்குடி மாவட்ட தலைமை அலுவலகம் திறப்புவிழா ;மாநிலத் தலைவர் இரா.இளங்கோவன் திறந்து வைத்தார். 


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 12 ; தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் ;தூத்துக்குடி மாவட்ட தலைமை அலுவலகம் திறப்புவிழா  நடந்தது.                      
                                                                                                                                                              தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்(TNHSPGTA ) ;தூத்துக்குடி மாவட்ட தலைமை அலுவலகம் திறப்புவிழா மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட பொதுக்குழுகூட்டம் மாவட்ட தலைவர் யூஜின்  தலைமையில்  நடந்தது. மாநிலஅமைப்பு செயலாளர் அ.சற்குணராஜ் முன்னிலை வகித்தார்.   
                                   
தூத்துக்குடி  மாவட்டதலைமை அலுவலகம்  புதியபேருந்து நிலையம் அருகில் உள்ள என்.பி காம்ப்ளக்ஸில் அமைப்பின் மாநிலத்தலைவர் இரா.இளங்கோவன்  திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட மகளிரணி செயலாளர் .மங்களாவதி  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.  .இக்கூட்டத்தில் மேனிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்சங்க நிர்வாகிகள் இருளாண்டபெருமாள்  தமிழகத் தமிழாசிரியர் கழகம் தூத்துக்குடி மாவட்டநிர்வாகி ஆதி அருமைநாயகம், நியோமேக்ஸ் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன்,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
                            
 இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
1) ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களை 20ம்தேதிக்குள் அழைத்துபேசி 9அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை தமிழகஅரசு நிறைவேற்றித்தரவேண்டும். மேலும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற ஆசிரியர்கள் மற்றும் அரசுஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள்மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் நிபந்தனை இன்றி இரத்து செய்யவும்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக இரத்து செய்து ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் மற்றும் அரசுக்கும் இடையேயான சுமுகமான உறவினை ஏற்படுத்த அரசுநடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
 2) திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் 101,102  விடைத்தாள் திருத்தும் முகாம் அமைக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறையை இச்செயற்குழு வலியுறுத்துகிறது 
3) தற்போது தூத்துக்குடிமாவட்டம் 3 கல்விமாவட்டங்களாக பிரிரக்கப்பட்டுள்ளதால், 101,102 கருத்தியல் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் இதர தேர்வு பணிகள் கல்வி மாவட்ட அடிப்படையில்நியமனம் செய்யும் போது ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்.ஆதலால் முதுகலை ஆசிரியர்களின் இருப்பிடத்தை அடிப்படையாக வைத்து அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வுப்பணி இதுறை அலுவலர்,பறக்கும்படை அலுவலர் ,அறைக்கண்காணிப்பாளர் போன்ற தேர்வுப்பணிகள் நியமிக்க வேண்டும். (இருப்பிடத்தில் இருந்து 15 கி. மீ தொலைவில் இருக்க வேண்டும்).வினாத்தாள் கட்டுக்காப்பாளர் இதுறை அலுவலர்,பறக்கும் படை அலுவலர் ,கூடுதல்துறை அலுவலர் ஆகியோர் பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படவேண்டும். 
4)முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மைக்கண்காணிப்பாளர் ஆகியோரை நியமிக்கும் போதுஅரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளியில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை மட்டுமே (மாணவர்கள் மற்றும் தேர்வு மந்தனத்தன்மையை கருத்தில்கொண்டு) நியமிக்கப்படவேண்டும். மெட்ரிக் மற்றும் சுயநிதி மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது
5)தற்போது நடைபெற்று வரும் மேனிலை வகுப்புகளுக்கான அரசு செய்முறைத் தேர்வுக்குரியஉழைப்பூதியம் புறத்தைர் வாளர் மற்றும் அகத்தேர்வாளருக்கு உரிய உழைப்பூதியத்தைஅந்தந்த மையங்களில்உடனடியாக வழங்கிடவேண்டும்என்று முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
5)மார்ச் மாதம் நடைபெற உள்ள மேனிலை வகுப்புக்கான தேர்வுப்பணிகளிலிருந்து உடல்நலக்குறைவுற்ற வயதான,சிகிச்சை பெற்றுவரும்ஆசிரியர்கள்,உடல் ஊனமுற்ற ஆசிரியர்கள், கர்ப்பிணிபெண் ஆசிரியர்கள் ஆகியோருக்கு தேர்வுப்பணியிலிருந்து முற்றிலும் விலக்களிக்கவேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
இதில் மாவட்ட செயலாளர்  மூக்கையா, மாவட்ட பொருளாளர்  ஜெகதீசன் ,மாவட்ட துணைத்தலைவர் சதீஸ்குமார், மாவட்ட, கல்வி மாவட்ட நிர்வாகிகள் நம்பிராஜன், சரவண முத்துக்குமார், ஜெபஸ்டின் ஜெயக்குமார், இராமச்சந்திரன்,முருகன்,சவரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட அமைப்பு செயலாளர் பிரான்சிஸ்பாரிஸ்துஸ் வழங்க ,தேசிய கீதம்பாடி விழா நிறைவுற்றது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo