Onetamil News Logo

முஸ்லிம் மக்களிடத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய அதிமுக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

Onetamil News
 

முஸ்லிம் மக்களிடத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய அதிமுக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்


தூத்துக்குடி 2019 அக்டோபர் 18 :மனு கொடுக்க சென்ற முஸ்லிம் மக்களிடத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய அதிமுக அமைச்சர் மீது தலைமைக்கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அஸாருதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான  இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது.

இந்நிலையில், நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை அந்தப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் சமுதாய மக்கள் நேரில் சந்தித்து தங்கள் பகுதியிலுள்ள ரேசன்கடை தொடர்பான மனுவை கொடுத்துள்ளனர்.

பொதுமக்கள் கொடுத்த அந்த மனுவை வாங்க மறுத்த அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘இஸ்லாமியர்கள் எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே, பிறகு ஏன் எங்களிடம் வந்து மனுவை தருகின்றீர்கள்?. வெறும் 6 சதவிகித வாக்குகளை வைத்துகொண்டு என்ன செய்யமுடியும்’ என்று பொறுப்பற்ற முறையில் இஸ்லாமிய மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளது கண்டனத்திற்குரியதாகும்.
அதிமுக தலைமையிலான தமிழக அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர் இப்படி நாகரீகமற்ற பேசியிருப்பது இஸ்லாமிய மக்கள் மட்டுமல்லாது அனைத்துதரப்பு மக்களிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினர் இதுவரைக்கும் தேர்தல்களில் பெற்ற வெற்றிகளுக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாததுபோல அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியிருப்பது அவரது அறியாமையை வெளிக்காட்டுகிறது.கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மோடியா? லேடியா? என, மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கேட்டு அந்ததேர்தலில் தனித்து நின்ற போது, மோடியை எதிர்த்த ஒரே காரணத்திற்காக அதிகபட்சமான இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு வாக்களித்தனர். இதன் காரணமாக அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றியைப் பெற்றது என்பது மறுப்பதற்கு இல்லை.

இதுபோல கடந்த 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் இஸ்லாமிய மக்களின் கணிசமான வாக்குகளை பெற்றே அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இப்படி இஸ்லாமிய மக்களிடம் வாக்குகள் வாங்கி ஆட்சி அமைத்திட்ட ஆட்சியில் தான் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அங்கம் வகிக்கிறார் என்ற வரலாறை எல்லாம் அவர் மறந்துவிட்டு பேசுவது முறையற்ற செயலாகும்.

பாஜகவோடு கூட்டணி வைத்ததால் இஸ்லாமியர்களின் ஆதரவை இழந்துவிட்டோம், அதனை மீண்டும் பெற்றே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு அதிமுக தலைமையில் உள்ளவர்கள் நினைத்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒட்டுமொத்த சிறுபான்மையினரையும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இழிவுபடுத்தியுள்ளார்.
சிறுபான்மையினரின் வாக்குகள் தேவையில்லை என்ற அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சு அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘விறுப்பு வெறுப்பின்றி செயல்படுவேன்’ என்று உறுதிமொழியுடன் பதவியேற்று விட்டு, தற்போது  அரசியலமைப்பு  சாசன சட்டத்திற்கு எதிராக சிறுபிள்ளைத்தனமாக பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிகவன்மையாக கண்டிக்கின்றது.வடநாட்டு பாஜக அமைச்சர் போல தன்னை நினைத்துக்கொண்டு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது அதிமுக தலைமைக்கழகம் உரிய நடவடிக்கை எடுத்து கட்டுப்பட்டுத்திடவேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo