Onetamil News Logo

தூத்துக்குடியில் எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள் 2 வது நாளாக வேலை நிறுத்தம் ; கேஸ் சிலிண்டர் பாதிக்கும் அபாயம்

Onetamil News
 

தூத்துக்குடியில் எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள் 2 வது நாளாக வேலை நிறுத்தம் ; கேஸ் சிலிண்டர் பாதிக்கும் அபாயம்


                                                                                          
தூத்துக்குடி பிப் 12 ; தூத்துக்குடியில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் : தென் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
                                                                                                                                                பாரத் பெட்ரோலிய நிறுவனம் உட்பட  கேஸ் நிறுவனங்கள் ஒவ்வொரு 3 ஆண்டகளுக்கும் ஒருமுறை டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்தத்தை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகம் புதுப்பித்து வெளியிடும். மேலும் அவை மண்டல அளவிலான ஒப்பந்தமாக இருக்கும். ஆனால் இம்முறை வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தம் 3 வருடங்களுக்கு பதிலாக 5 வருடங்களுக்கு கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவை மண்டல அளவில் இல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை கண்டித்தும் பழைய முறைப்படி 3 ஆண்டுகளுக்கு வாடகை ஒப்பந்தத்தை மாற்றியமைக்கவும், மண்டல அளவில் வாடகையை நிர்ணயிக்கவும் வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தென்தமிழக  டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து தூத்துக்குடி பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் சமையல் எரிவாயு ஏற்றிச் செல்லும் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளன.  இதனால் தூத்துக்குடி நெல்லை குமரி விருதுநகர் தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்வது பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo