Onetamil News Logo

இன்டெர்ன்ஷிப் பயிற்சி வழங்கிட விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் 29.02.2020க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்

Onetamil News
 

இன்டெர்ன்ஷிப் பயிற்சி வழங்கிட விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் 29.02.2020க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 19 ; தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு இன்டெர்ன்ஷிப் பயிற்சி வழங்கிட விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் 29.02.2020க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது... வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தமிழகத்தில் இயங்கி வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு சிறு, குறு, நடுத்தர மற்றம் பெரு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய இன்டெர்ன்ஷிப் பயிற்சி வழங்கிட அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
     இந்த பயிற்சியானது ஒவ்வொரு ஆண்டும் 10,000 பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இது குறித்த விரிவான விவரங்கள் கீழ்க்காணும் இணையதள முகவரியில் வழங்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்க விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

     மேலும் விவரங்களுக்கு அரசு தொழிற் பயிற்சி நிலையம், தூத்துக்குடி வளாகத்திலுள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் அவர்களை நேரிலோ அல்லது 0461-2340041, 9486471225, 8778333588 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். 
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 29.02.2020
இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பேச்சாளர் கவிஞர் மூர்த்தி, காங்ரஸ் கட்சி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன்,  அமமுக மாவட்ட செயலாளர் பரமசிவ ஐயப்பன், மதிமுக
மாவட்ட செயலாளர் நிஜாம், பாப்புலர் பிரண்ட் மாவட்ட தலைவர் முஹம்மது அலி சி,பி,எம் பாஸ்கரன், சி.பி.ஐ காசி விசுவநாதன் மக்கள் மேடை பழனி விசிக கரிசல் சுரேஷ், உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஹாமிஸ் அப்துல் காதர் மீராஷா, உஸ்மான், ஷாஹுல் உஸ்மானி உள்ளிட்டோர். செய்திருந்தனர்.  இதில் குடியுரிமை சட்டத்தை அமுல் படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. சி.ஏ.ஏ என்.ஆர்.சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டது. இதில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில பேசாளர் பேட்டை முஸ்தபா, மாவட்ட செயலாளர்கள் ஹயாத் முஹம்மது,பர்கிட் அலாவுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக மாநகர ஜமாத்துல் உலாமா சபை தலைவர் மவ்லவி ஜமால் மைதீன் பாகவி நன்றியுரை கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo