Onetamil News Logo

தூத்துக்குடியில் விதவைப் பெண் கொடூரக் கொலை ;பரபரப்பு 

Onetamil News
 

தூத்துக்குடியில் விதவைப் பெண் கொடூரக் கொலை ;பரபரப்பு 



தூத்துக்குடி 2018 நவம்பர் 8 ; தூத்துக்குடியில் விதவை பெண்ணைக் கொலைசெய்த நபரை  போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தையாபுரம் பொன்பாண்டி நகரில் வசிக்கும்  பாலமுருகன் (45). இவருக்கு தமிழரசிக்கும் திருமணம் முடிந்து  இருகுழந்தைகளுடன் வசித்துவந்தனர். இந்த நிலையில் தீடீரென்று பாலமுருகனுக்கும் தமிழரசிக்கும் பல்வேறு பிரச்சனைகள் குடும்பத்தில் ஏற்பட்டு இரண்டுபேரும்  பிரிந்துவிட்டனர் .                                                                                                           
இந்த நிலையில் முத்தையாபுரம் பகுதியில் இருந்த விதவைப்பெண் சாந்தி (40)யை பார்த்து அவருடன் பாலமுருகன்,  சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து உள்ளது. பாலமுருகன் , தமிழரசிக்கு பிறந்த இரண்டு  குழந்தைகள் உட்பட மொத்தம்  3 குழந்தைகளையும் சாந்தி பராமரித்து  வந்துள்ளார். 
இந்தநிலையில் இன்று இரவு பாலமுருகன் குடித்து வந்து சாந்தியுடன் சண்டைபோட்டுள்ளார்.  இதில்  வாக்குவாதம் முற்றி கோபத்தில் பாலமுருகன் சாந்தியை உருட்டு கட்டையால் தாக்கி, அவர் மீது கல்லை தூக்கி போட்டதாக கூறுகின்றனர். இதில் சாந்தி பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது  குறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து போலீசார் தப்பியோடிய பாலமுருகனை தேடி வருகின்றனர். இந்த நிகழ்வு பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo