Onetamil News Logo

உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ 6 லட்சம் தூத்துக்குடியில் பறிமுதல்

Onetamil News
 

உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ 6 லட்சம் தூத்துக்குடியில் பறிமுதல்


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 20 ; தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தையாபுரத்தில் உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ 6 லட்சத்தை    தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை  ஒட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவீர வாகன சோதனையில் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் இன்று  முத்தையாபுரம்  தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த  தனியார் ஏற்றுமதி நிறுவனத்துக்கு சொந்தமான கார் ஒன்றினை மடக்கி சோதனையிட்டனர் அப்போது அந்த காரில் உரிய ஆவனம் இல்லாமல் ரூபாய்  6 லட்சம்  இருப்பது தெரியவந்தது இதனை கைப்பற்றிய பறக்கும் படையினர் தூத்துக்குடி தாசில்தார் ஜான்சன் தேவசகாயம்-யிடம் ஒப்படைத்ததுடன் காரை ஒட்டி வந்த ஜேசையா மகன் பிரைட்வின் என்பவரை பிடித்து விசாரனை  செய்து வருகின்றனர்.விசாரணையில் துணைத் தாசில்தார் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo