Onetamil News Logo

தூத்துக்குடியில் +2  விடைத்தாள் திருத்தும் முகாம்களில் மாவட்ட சாரண, சாரணிய இயக்கத்தினர்  “கபசுரகுடிநீர்” வழங்கும்  பணி

Onetamil News
 

தூத்துக்குடியில் +2  விடைத்தாள் திருத்தும் முகாம்களில் மாவட்ட சாரண, சாரணிய இயக்கத்தினர்  “கபசுரகுடிநீர்” வழங்கும்  பணி


தூத்துக்குடி 2020 ஜூன்  2 ;தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் +2 விடைத்தாள் திருத்தும் முகாம்களில் இன்று “கொரோனா 19” விழிப்புணர்வுணர்வை ஏற்படுத்தும் வகையில் முகாம்களில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் “கபசுரகுடிநீர்” சாரண, சாரணிய இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும், தூத்துக்குடி மாவட்ட முதன்மை ஆணையருமான யு.ஞானகௌரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் நு.வசந்தா ஆகியோர் ூ2 விடைத்தாள் திருத்தம் செய்ய வந்த ஆசிரிய ஆசிரியைகளுக்கு கபசுரகுடிநீர் வழங்கி தொடங்கி வைத்தனர்.
+2  விடைத்தாள் திருத்த முகாமானது சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளி, ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ராமானுஜம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியை ளுஆ.வசந்தி, வேப்பலோடை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சேகர், கொங்கராயகுறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பேச்சியம்மாள், சீவலப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை வினோலியா ஆகியோர் தலைமையில் இயங்கி வரும் முகாம்களில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் சுமார் 660 பேர் மற்றும் இதர பணியாளர்கள் 55 பேர் ஆகியோருக்கு தூத்துக்குடி மாவட்ட சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பில் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.
 
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சு.கிருபை வேல்முருகன் அவர்களின் உறுதுணையுடன், தூத்துக்குடி மாவட்ட சாரண, சாரணிய இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் செ.எட்வர்ட் ஜாண்சன்பால் மாவட்ட இணைச்செயலாளர் சகாயமேரி வீனஸ், மாவட்ட ஆணையர் ரா.சண்முகம், மாவட்ட அமைப்பு ஆணையர் அல்பர்ட் தினேஷ் சாமுவேல், மாவட்ட பயிற்சி ஆணையர்கள் P.சரவணன், ஆ.ஜெயாசண்முகம் மற்றும் சாரண, சாரணிய பொறுப்பாசிரியர்கள் பிரித்விராஜ், கார்த்திக், ஜெபஸ்டின், சிவகுமார், பிரான்சிஸ், சு.ளு.பிரியங்கா, சுகுணாதேவி, அபிராமி, உதயம்மாள், சீதாசுந்தரி, மணிமேகலை, அல்பினாமேரி, மரிஷ்டா டெல்பியா, நளினா, அலமேலுமங்கை, சந்தானலெட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo