Onetamil News Logo

செப்டிக் டேங்க் மூடியில் நின்றவாறு கை, கால்களை கழுவிக் கொண்டிருந்த 16வயது சிறுவன் தொட்டிக்குள் விழுந்து மரணம் 

Onetamil News
 

செப்டிக் டேங்க் மூடியில் நின்றவாறு கை, கால்களை கழுவிக் கொண்டிருந்த 16வயது சிறுவன் தொட்டிக்குள் விழுந்து மரணம் 


தூத்துக்குடி 2020 ஜூலை 31 வெள்ளிக்கிழமை ;தூத்துக்குடியில் செப்டிக் டேங்க் மூடியில் நின்றவாறு கை, கால்களை கழுவிக் கொண்டிருந்த 16வயது சிறுவன் தொட்டிக்குள் விழுந்து மரணம் அடைந்தார்.
நவநாகரீக வளர்ச்சியில் உலகமே பீடு நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. கழிவறை இல்லாத வீடுகளை உருவாக்க அரசாங்கமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.இந்த நிலையில்  தூத்துக்குடி தாளமுத்துநகர், வண்ணாரபேட்டை 3வது தெருவைச் சேர்ந்தவர் முருகன்  மகன் சூரியபிரகாஷ் (16), என்பவராவார்.இவர் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இன்று மதியம் 2 மணியளவில் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.வீட்டின் செப்டிக் டேங்க் மூடியில் நின்றவாறு கை, கால்களை கழுவிக் கொண்டிருந்த 16-வயது சிறுவன் எதிர்பாராத விதமாக டேங்க் மூடி உடைந்து அவர் உள்ளே விழுந்துள்ளார். 
அப்பொழுது அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo