Onetamil News Logo

 தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த வாலிபரின் உயர் சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என்று, அவருடைய தாயார் கலெக்டர் அலுவலகத்தில்  கோரிக்கை மனு 

Onetamil News
 

 தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த வாலிபரின் உயர் சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என்று, அவருடைய தாயார் கலெக்டர் அலுவலகத்தில்  கோரிக்கை மனு 


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 12 ; தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த வாலிபரின் உயர் சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என்று, அவருடைய தாயார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தார்..
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சங்கரநாராயணன், உதவி ஆணையாளர் (கலால்) சுகுமார் ஆகியோர் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
.அதில் தூத்துக்குடி கருணாநிதிநகரை சேர்ந்த மகராஜன் மனைவி பிரம்மசக்தி என்பவர் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் வேலைக்கு சென்று கொண்டு இருந்த எனது மகன் விஜயகுமார் (வயது 25) என்பவர், துப்பாக்கி தோட்டா துளைத்ததில் படுகாயம் அடைந்தார். அவரது வலது காலில் குண்டுபாய்ந்து தொடை எலும்பு நொறுங்கி உள்ளது. அவருக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையும், மேல்சிகிச்சைக்கு உதவுவதாக அரசு உறுதி அளித்ததன் பேரில் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து மாதம்தோறும் பரிசோதனைக்கு சென்று வருகிறோம். ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்தும் தொடை எலும்பு சேராததால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர். எனவே அரசு உறுதி அளித்தபடி எனது மகன் கால் குணம் அடைந்து பழைய நிலைக்கு திரும்புவதற்கான மருத்துவ செலவு முழுவதையும் அரசு ஏற்று உயர் சிகிச்சைக்கு உதவ வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo