Onetamil News Logo

திசையன்விளை வாலிபர் நள்ளிரவில் தூத்துக்குடியில் ஆந்திரா லாரி மோதி விபத்தில் மரணம் 

Onetamil News
 

திசையன்விளை வாலிபர் நள்ளிரவில் தூத்துக்குடியில் ஆந்திரா லாரி மோதி விபத்தில் மரணம் 


தூத்துக்குடி 2020 ஆக 14 ;கோரம்பள்ளம் அய்யங்கார் பேக்கரி அருகே விபத்து வாலிபர் அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் வாங்கி விட்டு சாலையை கடக்கும் போது எதிரே வந்த வாகனம் மோதி வாலிபர் மரணம் அடைந்துள்ளார்.                                                                                                                   
                 திருநெல்வேலி மாவட்டம்,திசையன்விளை அருகே கடாக்குளத்தை சேர்ந்த  அந்தோணிமுத்து இவரது மகன் ஞானசேகர் (40). இவரும் மற்ற சிலரும் கோரம்பள்ளம் அருகே ஸ்ரீநகரில் தங்கியிருந்து சாலைகள் சர்வே செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் இரவில் கோரம்பள்ளம் மெயின் ரோட்டிற்கு ஞானசேகரும் மேலும் சிலரும் வந்தனர். இரவு சாப்பாடு வாங்கி கொண்டு தங்கும் இடத்திற்கு கிளம்பும் போது ஞானசேகர், அவரது மோட்டார் பைக்கிற்கு பெட்ரோல் வாங்க வேண்டும் என்றாராம். மற்றவர்கள் அந்த பகுதியில் நின்று கொள்ள ஞானசேகர் மட்டும் பெட்ரோல் பங்கிற்கு செல்ல சாலையை கிராஸ் செய்திருக்கிறார்.அப்பொழுது அந்த பகுதியில் உள்ள லாரி செட்டிலிருந்து தூத்துக்குடி நோக்கி கிளம்பி வந்த ஆந்திர மாநில லாரி, ஞானசேகரை தட்டிவிட்டதில் அவர் தள்ளாடி கீழே விழ, எதிர் திசையிலிருந்து நெல்லை நோக்கி சென்ற லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஞானசேகர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த ஹைவே பெட்ரோல் போலீஸ் மற்றும் புதுக்கோட்டை காவல்நிலைய போலீஸார், ஞானசேகரன் உடலை கைப்பாற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo