Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் 36267 பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ;அனைவருக்கும் சிறப்பு உதவி தொகை ரூ.1000/-வழங்கபடுகிறது ;தொடர்பு கொள்க ; தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மையம்,செயலாளர்/சார்பு நீதிபதி, R.சாமுவேல் பெஞ்சமின் தகவல்

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் 36267 பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ;அனைவருக்கும் சிறப்பு உதவி தொகை ரூ.1000/-வழங்கபடுகிறது ;தொடர்பு கொள்க ; தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மையம்,செயலாளர்/சார்பு நீதிபதி, R.சாமுவேல் பெஞ்சமின் தகவல்


தூத்துக்குடி 2020 நவம்பர் 18 ;பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு உதவி தொகையாக ரூ.1000/-(ரூபாய் ஆயிரம் மட்டும்) தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மையம்,செயலாளர்/சார்பு நீதிபதி, R.சாமுவேல் பெஞ்சமின், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நீதி பேராணை மனு எண்கள் 7533, 8277, 7511, மற்றும் 7720/2020 -ல் கடந்த 31.08.2020 அன்று பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், தமிழ் நாடு அரசின் அரசாணையின் படியும் கொரானா (COVID-19) பொது முடக்கம் காரணமாக பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு உதவி தொகையாக ரூ.1000/-(ரூபாய் ஆயிரம் மட்டும்) தமிழக அரசால் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 36267 பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அதில் 17573 பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மட்டுமே தமிழக அரசால் வழங்கப்படும் மேற்படி ரூ.1000/- உதவித்தொகையை பெற்றுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளில் இதுவரை மேற்படி உதவி தொகையை பெறமுடியாதவர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் ஒளிநகல் உடனும், தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு வைத்திருந்தால் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தை புகைப்படம் ஆகியவற்றுடன் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்ட உதவி மையத்தினையும், கோவில்பட்டி, திருச்செந்தூர், திருவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம் ஆகிய நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் தாலுகா சட்ட உதவி மையங்களையும் அணுகினால் மேற்படி உதவித்தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நேரில் வர இயலாதவர்கள் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம், தூத்துக்குடி மாவட்டம்-628001என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம் அல்லது dlsathoothukkudi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தகவல் அனுப்பி பயன் பெறலாம் என்பது இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo