Onetamil News Logo

தூத்துக்குடியில் ஒலிம்பிக் யோகா போட்டிக்கான தமிழ் நாடு அணி தேர்வு காமராஜர் கல்லூரியில் வருகின்ற ஜனவரி 20ம் தேதி நடைபெறும்

Onetamil News
 

தூத்துக்குடியில் ஒலிம்பிக் யோகா போட்டிக்கான தமிழ் நாடு அணி தேர்வு காமராஜர் கல்லூரியில் வருகின்ற ஜனவரி 20ம் தேதி நடைபெறும்


தூத்துக்குடி 2019 ஜனவரி 14 ;  தூத்துக்குடியில் ஒலிம்பிக் யோகா போட்டிக்கான தமிழ் நாடு அணி தேர்வு காமராஜர் கல்லூரியில் வருகின்ற ஜனவரி 20ம் தேதி நடைபெறுகிறது.                                                                                                                                       தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் M.சுந்தர வேல்-9629020141 தலைவர் ஷைன் யோகா பவர் C.தனலெட்சுமி-9894363004. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது.... தூத்துக்குடியில் NOn ஒலிம்பிக் யோகா போட்டிக்கான தமிழ் நாடு அணி தேர்வு காமராஜர் கல்லூரியில் வருகின்ற ஜனவரி 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. ‌தமிழ்நாடுயோகா கூட்டமைப்பு, "ஷைன் யோகா பவர்", காமராஜர் கல்லூரி NSS Unit 54&56, நேரு யுவகேந்திரா, தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் "2வது தமிழ் நாடு யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன் சிப்-2019".   ஆந்திர மாநிலத்தில் வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி  நடைபெற உள்ள Non-ஓலிம்பிக் யோகா போட்டிக்கான தமிழ் நாடு அணி தேர்வு வருகின்ற ஜனவரி 20ம் தேதி காமராஜர் கல்லூரியில் நடைபெறும். வயது பிரிவு (3-6,7-10,11-14,15-17,18-22,23-25,26-35) ஆகிய பிரிவுகளிலும் சாம்பியன் பிரிவில2ம் வகுப்பு முதல் உள்ள அனைத்து பிரிவுகளிலும் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ மாணவியர்கள் வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி ஆந்திராவில் நடைபெற உள்ள Non-ஓலிம்பிக் யோகா போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.நேரடி அரசு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் தங்கள் பள்ளி அனுமதி சான்று கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.போட்டியில் கலந்து கொள்ளும் அணைவருக்கும் சான்றிதழும்,பரிசும் வழங்கப்படும் என்று  போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தார்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து யோகா மாணவ மாணவிகளும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற அதில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo