Onetamil News Logo

உலகக்கோப்பை போட்டியில் தூத்துக்குடி ரஜோ பாக்ஸிங் மற்றும் விளையாட்டு கழக மாணவர்கள் மலேசியாவில் பதக்கங்கள் வென்று சாதனை 

Onetamil News
 

உலகக்கோப்பை போட்டியில் தூத்துக்குடி ரஜோ பாக்ஸிங் மற்றும் விளையாட்டு கழக மாணவர்கள் மலேசியாவில் பதக்கங்கள் வென்று சாதனை 


 தூத்துக்குடி 2019 அக்டோபர் 9 ; தூத்துக்குடி ரஜோ பாக்ஸிங் மற்றும் விளையாட்டு கழக மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். 
மலேசியாவில்  அக்டோபர் 3 முதல் 6ஆம் தேதி வரை நடைபெற்ற முதல் உலகக்கோப்பை சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு நமது தூத்துக்குடி ரஜோ பாக்ஸிங் மற்றும் விளையாட்டு கழக மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். மாணவி சுஸ்மா ஜுனியர்களுக்கான கம்பு சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கமும், தனித் திறமை போட்டியில் வேல் கம்பு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மாணவி லோகேஸ்வரி கம்பு சண்டை போட்டியில் நான்காவது இடமும், தனித் திறமை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். மாணவிகள் சுஸ்மா, லோகேஸ்வரி இருவரும் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயில்கின்றனர். அதேபோல் தூத்துக்குடி பிஎம்சி பள்ளியை மாணவி சுவேதா ஜுனியர் கம்பு சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். தனித் திறமை போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.
ரஜோ பாக்ஸிங் மற்றும் விளையாட்டு கழக பயிற்சியாளர் ராஜேஷ் பாலன் சீனியர் பிரிவில் கம்பு சண்டை போட்டியில் மலேஷியா வீரரை இறுதி போட்டியில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். மொத்தம் 9 நாடுகள் கலந்து கொண்ட இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo