Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆப்பிரிக்கரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல்

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆப்பிரிக்கரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல்


தூத்துக்குடி 2019 மார்ச் 14 ;தூத்துக்குடி மாவட்டத்தில் ஆப்பிரிக்கரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல்
தெரிவித்துள்ளார்.                                                                                                                                                          
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது.....தூத்துக்குடி மாவட்டத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பில் இந்திய பெருங் கெண்டை மீன்வகைகளான கட்லா,ரோகு,மிர்கால் மற்றும் சீன பெருங்கெண்டைமீன் வகைகளான வெள்ளிக்கெண்டை, புல்கெண்டை, சாதாகெண்டை மற்றும் மரபியல் மேம்படுத்தப்பட்ட வளாப்புதிலேபியா ,மீன்குஞ்சுகளை தேர்வு செய்து விவசாயிகள் மீன்வளர்ப்பு பணிமேற்கொண்டு உரிய வருவாயினை ஈட்டிவருகின்றனர். 
                                         
மத்திய மற்றும் மாநிலஅரசுகளினால் ஆப்பிரிக்க ரககெளுத்தி மீன்கள்,வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இம்மீன் இனங்கள் மற்ற மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை அதி தீவிரமாக இரையாக உண்ணும் தன்மை உடையதால் நமது பாரம்பரிய மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்களையும் அவற்றில் முட்டைகளையும் முற்றிலுமாக அழித்துவிடும். ஆகையினால் நமது நீர்நிலைகளில் உள்ள அனைத்து பாரம்பரிய நீர்வாழ் உயிரினங்களும் அழியும் வாய்ப்புள்ளது. மேலும் இம்மீனினங்கள் காற்றிலுள்ள பிராணவாயுவினை சுவாசிக்கும் தன்மையும் மிகக் குறைந்த ஆழமுள்ள நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மையும் உடையது. இம்மீன்கள் பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இனப்பெருக்கம் மேற்கொண்டு அவற்றின் மரபியலை சிதைத்து ஆப்பிரிக்க ரககெளுத்தி மீன்கள் பல்பெருக்கம் அடையக்கூடிய வல்லமையுடையது. மேலும் மழை மற்றும் பெரு வெள்ளகாலங்களில் இம் மீனினங்கள் வளர்ப்பு செய்யும் குளங்களிலிருந்து தப்பி வெளியேற வாய்ப்புள்ளதால்,தப்பித்து செல்லும் மீன்கள் உள்நாட்டு நீர்நிலைகளில் மற்றபாரம்பரிய மீன்களை முற்றிலும் அழித்து பல்பெருக்கம் அடைந்து ஒரு காலகட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் ஆப்பிரிக்க ரககெளுத்தி மீன்களைத் தவிர பிற மீன்கள் இல்லாமல் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே மத்தியமற்றும் மாநில அரசுகளினால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்க ரககெளுத்தி, மீன்களை வளர்ப்பு செய்வது மற்றும் விற்பனை செய்வது குற்றமாகும். எனவே இதுதொடர்பாக புகார்கள் ஏதேனும் பெறப்படின் அம்மீன்களைமுற்றிலும் அழித்திடவேண்டி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் இதன் வாயிலாக எச்சரிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்களும் இவ்வகை மீன்களை வாங்கிடவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
ஆகையினால் மீன்வளத்துறை மற்றும் மீன்வளபல்கலைக் கழகத்தின் வாயிலாக பரிந்துரை செய்யப்படும் மீனினங்களை மட்டுமே வளர்ப்பு செய்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது எனமாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo