Onetamil News Logo

உழைக்காமல் சம்பளம் பெரும் ஆசிரியர்களுக்கு கொரோனா சம்பந்தப்பட்ட பணிகளுக்கு நியமிக்கப்படுவார்களா? வக்கீல் ரமேஷ்பாண்டியன் கேள்வி ?  எழுப்பியுள்ளார்.

Onetamil News
 

உழைக்காமல் சம்பளம் பெரும் ஆசிரியர்களுக்கு கொரோனா சம்பந்தப்பட்ட பணிகளுக்கு நியமிக்கப்படுவார்களா? வக்கீல் ரமேஷ்பாண்டியன் கேள்வி ?  எழுப்பியுள்ளார்.


   

தூத்துக்குடி 2020 ஜூலை 10 ;உழைக்காமல் சம்பளம் பெரும் ஆசிரியர்களுக்கு கொரோனா சம்பந்தப்பட்ட பணிகளுக்கு ,பொறுப்பாளராக, உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்களா? என்று தூத்துக்குடி சமூக ஆர்வலர் வக்கீல் ரமேஷ்பாண்டியன் கேள்வி?  எழுப்பியுள்ளார். 
இதுகுறித்து தூத்துக்குடி சமூக ஆர்வலர் வக்கீல் ரமேஷ்பாண்டியன் கூறியதாவது.... தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,மற்றும் தனிமைப்படுத்தும் கல்லூரிகள்,பள்ளிகளுக்கு 100க்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் தேவை என்கின்ற அடிப்படையில் இன்று அரசு சம்பளம் பெற்றுக்கொண்டு வீட்டில் முடங்கிக்கிடக்கும் அரசு ஊழியர்களுக்கு பணிமாற்றி வழங்கிட வேண்டும். இவர்களால் அரசு சம்பளம் விரையமாகிறது. வேலை இல்லாமல் இவர்களுக்கு கைநிறைய சம்பளமா? இன்று இந்தியாவில் வேலை இல்லாத பட்டதாரிகள் லட்சக்கணக்கானோர் பல ஆண்டுகளாக வீட்டில் முடங்கி உள்ளனர்.இந்த நிலையில் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் போன்றோர் சம்பளம் பெற்றுக்கொண்டு வீட்டில் சும்மா இருக்கின்றனர்.   இவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கிடவேண்டும்.இவர்கள் மூலம் பொதுமக்களுக்கு ஆலோசனைகள், அறிவுரைகள்,வழிகாட்டியாக செயல்பட அறிவுறுத்தவேண்டும். அப்பொழுது கொரோனாவை ஒழிக்கலாம்.கொரோனா வராமல் தடுப்பதோடு முன் எச்சரிக்கையாக செயல்பட வைக்கலாம்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உழைக்காமல் சம்பளம் பெரும் ஒரு சில நீதிமன்ற ஊழியர்கள் முதல் பல துறை அரசு ஊழியர்களுக்கு கொரோனா சம்பந்தப்பட்ட பணிகளுக்கு கண்காணிப்பு  அலுவலராக ,உதவியாளர்களாக நியமிக்கவேண்டும்,இதனால் மற்ற அரசு ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும். தூத்துக்குடியில் பெருகிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo