Onetamil News Logo

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தும் போது அவர்களது சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை இணையதள முகவரியை பயன்படுத்தி சரிபார்த்துக் கொள்ள வேண்டும் ;தூத்துக்குடி கலெக்டர் தகவல் 

Onetamil News
 

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தும் போது அவர்களது சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை இணையதள முகவரியை பயன்படுத்தி சரிபார்த்துக் கொள்ள வேண்டும் ;தூத்துக்குடி கலெக்டர் தகவல் 


தூத்துக்குடி  2019 ஜூலை 19 ;தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலையம், தொழிற்பயிற்சி பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மாணவர்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தும் போது அவர்களது சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை இணையதள முகவரியை பயன்படுத்தி சரிபார்த்துக் கொள்ள வேண்டும்  - தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது.... வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் தொழிற் பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற் சான்றிதழ்கள் மற்றும் தொழிற் பழகுநர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ்களும், டி.ஜி.டி புதுதில்லியில் வழங்கப்படுகிறது. தேசிய தொழிற் சான்றிதழ்கள்/ தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ்கள் / தொழிற்பள்ளி சான்றிதழ் பெற்ற முன்னாள் பயிற்சியாளர்கள் பணியில் அமர்த்தப்படும் நேர்வில் அவர்களது சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க தபால்கள் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு சான்றிதழ்கள் தபால்கள் மூலமாகவே அனுப்பப்பட்டு வந்தது. இத்துறையால் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வழங்கிய ஆவணங்கள் கணினிமயமாக்கப்படாமல் இருந்ததால் சான்றிதழின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணிகள் உரிய ஆவணங்களுடன் ஒப்பு நோக்கி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனை எளிமையாகவும், விரைவாகவும் வழங்கும் பொருட்டு  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபில் அவர்களால் இணையதளம் மூலம் சான்றிதழ் சரிபார்க்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் தொழிற் பழகுநர் திட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் தொழிற் பள்ளியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தும் போது அவர்களது சான்றிதழ்களின் (தேசிய தொழிற் சான்றிதழ்(என்.டி.சி) / தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ(என்.ஏ.சி) / தொழிற் பள்ளி சான்றிதழ்(எஸ்.சி.வி.டி) உண்மைத் தன்மை சரிபார்ப்பு தேவை ஏற்படும் போது இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in    →  Login  →  Certificate Verification – –ஐப் பயன்படுத்தி சான்றிதழ் உண்மைத் தன்மையை அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo