1962க்கு பிறகு தூத்துக்குடியில் பேய் மழை 489.5 மி.மீ. பொழிவு;மக்கள் புலம்பல் ;சாலைகள் வாய்க்கால் ஆக மாறியது.
தூத்துக்குடி 2021 ஜனவரி 13 ; தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த பேய் மழை: 489.5 மி.மீ. பொழிவு; ரயில், பஸ் போக்குவரத்து பாதிப்பு; மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம்: 489.5 மில்லி மீட்டர் மழை பதிவானது. இன்னும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் ரயில், பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது.காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கடலோரப் பகுதிகளில் மழை கடுமையாகப் பெய்து வருகிறது.இன்று பிற்பகலில் தொடங்கிய மழை , நேரம் செல்லச் செல்லச் தீவிரமடைந்தது. பல்வேறு இடங்களில் விடாது மழை வெளுத்து வாங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று ( 8 AM to 4 PM )13ம் தேதி பெய்த மழை அளவு,
1.திருச்செந்தூர்: 19மி.மீ.
2.காயல்பட்டினம்: 16 மி.மீ.
3. குலசேகரப்பட்டினம்: 23 மி.மீ.
4. விளாத்திகுளம்: 4 மி.மீ.
5. கடல்குடி: 2மிமீ
6. வைப்பார்: 43மி.மீ.
7. சூரங்குடி: 40 மி.மீ.
8. கோவில்பட்டி: 6 மி.மீ.
9. கழுகுமலை: --- 2.5மி.மீ.
10.கயத்தார்: --- 27மிமீ.
11. கடம்பூர்: ---26 மி.மீ.
12. ஓட்டப்பிடாரம்: 65 மி.மீ.
13. மணியாச்சி: 34மி.மீ.
14.வேடநத்தம்: 55 மிமீ.
15. கீழ அரசடி: 20 மி.மீ.
16. எட்டையாபுரம்: 4மி.மீ.
17.சாத்தான்குளம்: 21மி.மீ.
18.ஸ்ரீவைகுண்டம்: --- மி.மீ.
19. தூத்துக்குடி: 62 மி.மீ.
மொத்தம்: 489.5 மி.மீ.
சராசரி: 25.8 மி.மீ.
பரவலாக மழை பெய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.