Onetamil News Logo

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் வருகிற 15ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்த நாள் விழாவை ; திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை 

Onetamil News
 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் வருகிற 15ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்த நாள் விழாவை ; திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை 


தூத்துக்குடி 2018 செப் 13 ;தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் வருகிற 15ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. 
இது குறித்து திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...  பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 15ம் தேதி  சனிக்கிழமை அன்று  காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு எனது (கீதாஜீவன்) தலைமையில் மாலை அணிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகரத்திற்கு உட்பட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, வார்டு நிர்வாகிகள், அனைவரும் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். அதே போல் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் ஊராட்சி கழக அளவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திடவும் சிலை இல்லாத ஊர்களில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திட கழகத் தோழர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று  அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo