Onetamil News Logo

பொள்ளாச்சி சம்பவம் தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு, தூத்துக்குடி விமான நிலையத்தில் தொல்.திருமாவளவன் பேட்டி தூத்துக்குடி 2019 மார்ச் 13 ;பொள்ளாச்சி சம்பவம் தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு, தூத்துக்குடி வி

Onetamil News
 

பொள்ளாச்சி சம்பவம் தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு, தூத்துக்குடி விமான நிலையத்தில் தொல்.திருமாவளவன் பேட்டி 


தூத்துக்குடி 2019 மார்ச் 13 ;பொள்ளாச்சி சம்பவம் தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு, தூத்துக்குடி விமான நிலையத்தில் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறினார்.
காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் முதல்முறையாக கன்னியாகுமரியில் தனது பரப்புரையை துவங்குகிறார். இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர்,  "தமிழகம் புதுச்சேரி உள்பட 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.பொள்ளாச்சி சம்பவம் தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு, பொள்ளாச்சி சம்பவத்தில் சம்பந்த பட்டவர்களை நீதிமன்ற கண்காணிப்பு குழுவின் கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணை குழு மூலம் விசாரணை செய்ய வேண்டும்.நீதிமன்ற கண்காணிப்பு குழுவின்  விசாரணை கேட்டு 15 தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.மோடி மிகவும் ஆபத்தனவர். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் " என்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo