Onetamil News Logo

மக்கள் தொடர்ந்து தங்கத்தை வாங்காமல் இருந்தால் மட்டுமே தங்கத்தின் விலையை மீட்டெடுக்க முடியும் ;சமூக ஆர்வலர்கள் கருத்து 

Onetamil News
 

மக்கள் தொடர்ந்து தங்கத்தை வாங்காமல் இருந்தால் மட்டுமே தங்கத்தின் விலையை மீட்டெடுக்க முடியும் ;சமூக ஆர்வலர்கள் கருத்து     


தூத்துக்குடி  2020 மே 27 ; உலகம் முழுக்க பங்குச் சந்தைகள் மற்றும் கடன் பத்திரங்கள் என எதிலுமே முதலீட்டாளர்களுக்கு பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. எனவே தான், முதலீட்டாளர்கள் தங்கத்தில் குவிந்து கொண்டு இருக்கிறார்கள். தங்கத்தின் விலையும் கணிசமாக ஏற்றம் கண்டு கொண்டே இருக்கிறது.
இந்தியாவிலேயே தங்கத்தின் மோகம் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான், இந்தியாவில் உள்ள பங்கு சந்தையில் முதலீடு செய்ய முடியாததால் குறிப்பிட்ட சில சமுதாய ரீதியிலான நபர்கள் தங்கத்தில் முதலீடு செய்து பதுக்குதல் செய்துள்ளனர்.அதற்கு தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் கிலானி சொல்கிறார் உலக பொருளாதாரம் வீழ்ந்ததால் தங்கத்தில் முதலீடு செய்துள்ளார்கள். தங்கம் விலை குறையவேண்டுமானால் பொருளாதாரத்தை மீட்க அரசுகள் தங்கள் வசம் வைத்துள்ள தங்கத்தை விற்க நடவடிக்கை எடுத்தால் தான் தங்கத்தின் விலை குறையும் இல்லை, தங்கம் விலை 6000 வரை வரும் என்று சொல்கிறார்கள்.ஆனால் மக்கள் நினைத்தால் தங்கத்தின் விலையை குறைக்கமுடியும்.அதிலும் இந்தியாவில் தமிழ்நாட்டு மக்கள் நினைத்தால் தங்கம் விலையை குறைக்கமுடியும்.ஏனென்றால் இந்தியாவிலேயே தங்கத்தின் மோகம் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான்,மக்கள் தொடர்ந்து தங்கத்தை வாங்காமல் இருந்தால் மட்டுமே கொள்ளைக் காரர்களிடமிருந்து தங்கத்தின் விலையை மீட்டெடுக்க முடியும்.இலங்கையில் தங்கம் விலை நேற்று  ₹3865, இந்தியாவில் இன்று  தங்கம் விலை? ₹4,524 / ,   
  பேங்க் ஆஃப் அமெரிக்காவின் அனலிஸ்டுகள், தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில், அடுத்த 2021-ம் ஆண்டு முடிவுக்குள், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமாராக 3,000 அமெரிக்க டாலர் வரை தொடலாம் எனக் கணித்து எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள்.
 இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால், 10 கிராம் தங்கத்துக்கு சுமாராக 82,000 ரூபாய் வருகிறது. இது இன்றைய அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்புக்கு வரும் தொகை என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும்.
இந்தியாவின், எம் சி எக்ஸ் (Multi Commodity Exchange) என்கிற கமாடிட்டி சந்தையில், தங்கம் ஃப்யூச்சர் காண்டிராக்ட்களாக வர்த்தகமாகி வருகின்றன. அதில் கூட ஜூன் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க காண்டிராக்ட் சமீபத்தில் 47,327 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தகக்து

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo