Onetamil News Logo

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து  தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு 

Onetamil News
 

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து  தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு 


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 19 ;கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து  தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தாளமுத்துநகர் சமீர் வியாஸ் நகரைச் சேர்ந்த ராமர் மகன் பொன்வண்டு என்ற பொன்ராஜ் (26ஃ19) என்பவர், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த ஜேசுராஜா மகன் திலக் என்பவரிடம்  டிரைவராக  வேலை பார்;த்து வந்தார். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணேச பூபதி (25/15) என்பவரும் திலக் என்பவரிடம் மாற்று டிரைவராக வேலை பார்த்து வந்தார். 
பொன்ராஜ் என்ற பொன்வண்டுக்கும், கணேச பூபதி இருவருக்குமிடையே தொழில் போட்டி இருந்து வந்திருக்கிறது. இந்த விரோதம் காரணமாக கடந்த 24.07.2015 அன்று இரவு பொன்வண்டு என்ற பொன்ராஜ், கணேச பூபதியை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். 
திலக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பொன்வண்டு என்ற பொன்ராஜை கைது செய்தனர். 
மேற்படி வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு ஐஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி கௌதமன்  இன்று (19.08.2019) பொன்வண்டு என்ற பொன்ராஜை குற்றவாளி என தீர்ப்பு வழங்கி, பொன்ராஜ்க்கு ஆயுள்தண்டனையும், ரூபாய் 1000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். 
மேற்படி தீர்ப்பின் அடிப்படையில் பொன்வண்டு என்ற பொன்ராஜ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo