Onetamil News Logo

அகழாய்வு பகுதிகள் குறித்து பஸ், ரெயில் நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து பழமையான இடங்கள் மற்றும் அகழாய்வு நடைபெறும் இடங்கள் குறித்து பஸ், ரெயில் நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபத

Onetamil News
 

அகழாய்வு பகுதிகள் குறித்து பஸ், ரெயில் நிலையங்களில் அறிவிப்பு பலகைகள்
மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து பழமையான இடங்கள் மற்றும் அகழாய்வு நடைபெறும் இடங்கள் குறித்து பஸ், ரெயில் நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து 



தூத்துக்குடி  2020 நவம்பர் 26 ;அகழாய்வு பகுதிகள் குறித்து பஸ், ரெயில் நிலையங்களில் அறிவிப்பு பலகைகள்
மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து பழமையான இடங்கள் மற்றும் அகழாய்வு நடைபெறும் இடங்கள் குறித்து பஸ், ரெயில் நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் குறித்து புத்தகம் எழுதி உள்ளேன். தூத்துக்குடி மாவட்டம் -ஏரல் தாலூகாவுக்கு உட்பட்ட பகுதியில் கொற்கை என்ற கிராமம் உள்ளது.
தாமிரபரணி ஆற்றின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த கொற்கையில் தான் பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டை ஆட்சி செய்து உள்ளனர். இந்த இடம் பற்றி சங்ககால தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல முக்கியான துறைமுக நகரமாக விளங்கி இருக்கலாம் என்று புவியியளார்கள் தெரிவிக்கின்றனர். எனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொற்கை கிராமத்தில் அகழாய்வு நடத்தவும் இங்கு கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு உட்பட்டது.  அறிக்கை வெளியிடவும் உத்தர விட வேண்டும் என்ற கூறியிருந்தார்.
 இந்த  வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள் தமிழ்நாட்டுக்குதான் அதிக அளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் பழமையான இடங்கள், அகழாய்வு நடைபெறும் இடங்கள் பற்றி பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு தெரியப்படுத்தப்படுவது இல்லை.
மதுரை ஐகோர்ட்டின் எதிர்புறம் உள்ள யானை மலையில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணர் படுகைகள் தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளன. ஆனால் இங்குள்ள வக்கீல்கள் எத்தனை பேருக்கு இதுபற்றிதெரியும் என நீதிபதி கேள்வி எழுப்பினர். பழமையான இடங்கள் குறித்து அறிவிப்பு பலகைகள் வைப்பதால் அப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை தடுப்பதுடன் பழமை அழியாமல் பாதுகாக்கவும் முடியும் மேலும் சுற்றுலா வுக்காக தமிழகம் வருபவர்களையும் இது அதிக அளவில் ஈர்ப்பதாக இருக்கும்.
மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு வார இறுதியில் லட்சக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். எனவே மக்கள் பழமையான இடங்கள் மற்றும் தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்றம் நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், கோர்ட்டுகள்  போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பழமை வாய்ந்த  இடங்கள் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படும் இடங்களை பற்றிய விவரங்களுடன் அறிவிப்பு பலகைகள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இது குறித்து மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்கவேண்டும் என நீதிபதிகள் கூறினர். பின்னர் இந்த வழக்கை வருகிற  9 ந்-தேக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo