Onetamil News Logo

விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்க 70% மானியம்  - விருப்பமுள்ள ஆதிதிராவிட விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் - மாவட்ட  ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி,தகவல்

Onetamil News
 

விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்க 70% மானியம்  - விருப்பமுள்ள ஆதிதிராவிட விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் - மாவட்ட  ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி,தகவல்


தூத்துக்குடி 2020 ஜூலை 14 ;தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதி திராவிட விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்க 70 சதவீத மானியம்  - விருப்பமுள்ள ஆதிதிராவிட விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் - மாவட்ட  ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி,தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு   ;2020- 2021 ஆம் நிதியாண்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மத்திய அரசின் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்   திட்டத்தின்  (Pஆ- முருளுருஆ)  கீழ் வேளாண்மை பொறியியல் துறைக்கு  முதற் கட்டமாக 60  எண்கள்  சூரிய சக்தியால்  இயங்கும் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.  இதில் ஆதி திராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு  30  எண்கள் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில்  ரூ. 57.16 லட்சம் நிதி ஒதுக்கீட்டில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சூரிய சக்தி பம்புசெட்டுகள் மூலம் வெயில் காலங்களில் பகலில் சுமார் 8 மணி நேரம் பாசனத்திற்கு தடையில்லா மின்சாரம் பெற இயலும்.
மானியம் விபரம்: இத்திட்டம் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடனும் மற்றும் தமிழக அரசின் 40  சதவீத மானியத்துடனும்  ஆக மொத்தம் 70 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படுகிறது.  மீதமுள்ள 30  சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பாகும்.
விலை விபரம்: இத்திட்டத்தின் கீழ் 5 முதல் 10 குதிரைத்திறன்  வரையிலான மோட்டார் பம்பு செட்டுகளுக்கான விலை நிர்ணயம் செய்தல் மற்றும் நிறுவனங்களை அங்கீகரித்தல் ஆகியவை மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 5 hp AC  மற்றும் 5 hp DC  சூரியசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி மோட்டார் பம்பு செட்டு அமைப்பதற்கான மொத்த விலை முறையே  ரூ.2,37,947/- மற்றும் ரூ.2,42,303/- ஆகும்.  இதில் விவசாயிகளின் 30 %  பங்களிப்பு முறையே ரூ.71,384/- மற்றும் ரூ.72,691/- ஆகும். 
       7.5 hp AC  மற்றும் 7.5 hp DC  சூரியசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி மோட்டார் பம்பு செட்டு அமைப்பதற்கான மொத்த விலை  முறையே ரூ.3,16,899/- மற்றும் ரூ.3,49,569/- ஆகும்.  இதில் விவசாயிகளின் 30 % பங்களிப்பு முறையே ரூ.95,070/- மற்றும் ரூ.1,04,871/- ஆகும்.
 10 HP AC  மற்றும் 10  HP DC  சூரியசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி மோட்டார் பம்பு செட்டு அமைப்பதற்கான மொத்த விலை முறையே ரூ.4,37,669/- மற்றும் ரூ.4,39,629/-  ஆகும்.  இதில் விவசாயிகளின் 30%  பங்களிப்பு  ரூ.1,31,301/-  மற்றும் ரூ.1,31,889/-ஆகும்.
        மொத்த விலை என்பது  நிறுவுதல் செலவு, வரிகள், 5 ஆண்டுகால பராமரிப்பு மற்றும் காப்பீடு செலவுகளை உள்ளடக்கியது
நெறிமுறைகள்:
1. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO)  மூலம் இலவச மின்  இணைப்புக்கோரி ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் அவர்களுடைய மூதுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை.  தங்களுக்குரிய இலவச மின் இணைப்பு முறை (normal priority)  வரும்பொழுது சூரியசக்தியினை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மதக் கடிதத்தை சம்பந்தப்பட்ட உதவிசெயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தில் வழங்க வேண்டும்.  
2. இதுவரை இலவச மின் இணைப்புக் கோரி விண்ணப்பிக்காத விவசாயிகள் இலவச மின் இணைப்பு
கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. 
3. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சூரியசக்தியினை மின் கட்டமைப்புடன் வரும் காலங்களில்
இணைத்திட விரும்பும் விவசாயிகள், இலவச மின் இணைப்புக் கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 
4. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளிக்கும் பொழுது, சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை
நுண்ணீர் பாசனத்துடன் இணைத்திட உறுதிமொழி அளித்திட வேண்டும்.
5. வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீர் நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள்,  காரை
இடப்படாத கால்வாய்களிலிருந்து 50 மீட்டருக்குள், நிலத்தடி நீரை இறைப்பதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட தொலைவிற்குள் நிலத்தடி நீரை இறைக்க வேண்டுமானால் பொதுப்பணித்துறையிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும்.  
அணுக வேண்டிய அலுவலகம்
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள், 1) உதவி  செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, 4/122-1யு,  ஸ்டேட் பாங்க் காலணி வடக்கு, ஆறுமுகச்சாமி காலனி அருகில், தூத்துக்குடி (கைபேசி எண் 9443694245) அலுவகத்தையும், 2) உதவி  செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, 27ர், எட்டையபுரம் ரோடு பிரதான சாலை, கனரா வங்கி பின்புறம், கோவில்பட்டி (கைபேசி எண் 9442049591) அலுவகத்தையும், 3) உதவி  செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, 65/10ஊ,  முத்துமாலை அம்மன் கோவில் தெரு, திருச்செந்தூர் (கைபேசி எண் 9443157710) அலுவகத்தையும், 4) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை செயற் பொறியாளர் அலுவலகத்தையும்  (கைபேசி எண் - 6374350057) தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட  ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo