Onetamil News Logo

பனைப்பொருட்கள் பயன்பாடு ;பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை மக்கள் பெறுகிறார்கள்.

Onetamil News
 

பனைப்பொருட்கள் பயன்பாடு ;பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை மக்கள் பெறுகிறார்கள்.


தூத்துக்குடி 2018, நவம்பர் 26 : பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை மக்கள் பெறுகிறார்கள். பனையிலிருந்து ஏராளமான உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. முற்காலத்தில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்ட எத்தனையோ பொருட்கள் நவீன மாற்றீடுகளுக்கு இடம் கொடுத்து ஒதுங்கிக் கொண்டன. பனையிலிருந்து பல உப உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் மனிதர்களின் உணவும், விலங்குகளின் உணவும் அடங்கும். உணவுப்பொருட்களை விட கட்டடப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல பொருட்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
உணவுப்பொருட்கள், உணவுப்பொருள் அல்லாதவை, வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள், விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள்,அலங்காரப் பொருட்கள்,போன்றவற்றில் உதவுகிறது.
நுங்கு
பனம் பழம்
பூரான்
பனாட்டு – (பனை + அட்டு) பனம்பழத்தைப் பிழிந்து எடுத்து உலரவைத்து செய்யப்படும் பொருள்.
பாணிப்பனாட்டு
பனங்காய்ப் பணியாரம்
கள்ளு
பனங்கள்ளு
பனஞ்சாராயம்
வினாகிரி
பதநீர்
பனங்கட்டி = கருப்பட்டி = பனைவெல்லம்.
சில்லுக் கருப்பட்டி
பனங்கற்கண்டு
பனஞ்சீனி (பனை வெல்லம்)
பனங்கிழங்கு
ஒடியல்
ஒடியல் புட்டு
ஒடியல் கூழ்
புழுக்கொடியல்
முதிர்ந்த ஓலை
விலங்கு உணவு
குருத்து
உணவுப்பொருள் அல்லாதவை
பனைப் பொருட்கள் கடை
பனை ஓலைச் சுவடிகள்
கடகம்
பனை ஓலைத் தொப்பி
குருத்தோலை
சுவடிகள்
பனையோலைப் பெட்டி செய்தல்
வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள்
பனையோலை
அலங்காரப்பொருள்
பனையோலை கைத்தொழில்
பெட்டி
நீற்றுப் பெட்டி
கடகம்
பனைப்பாய்
கூரை வேய்தல்
வேலியடைத்தல்
உமல்
விசிறி இதன்மூலம் பனையிலிருந்து ஏராளமான உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதை அறிந்துள்ளோம்.  பனை மரங்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன.சமீப காலமாக பனை மரங்களை செங்கல் சூளையில் எரிப்பதற்கும், கட்டைக்காககவும் அதிகளவில் வெட்டி அழிக்கின்றனர். துாத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இதற்காக வருகின்றனர்.பனை மரத்தின் அத்தனை பகுதிகளுமே பயன் தரக்கூடியது. பதநீர் உடல் நலத்திற்கு ஏற்ற பானம். அதில் இருந்து கிடைக்கும் கருப்பட்டிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. நுங்கு, பனங்கிழங்கு சாப்பிடாதவர் இருக்க முடியாது.பனை ஓலை, மட்டை, நார் என எல்லா பாகங்களும் பயன்தருவதாகும். குருத்தோலையில் இருந்து பல்வேறு அலங்கார பொருட்கள், பெட்டிகள் தயாரிக்கின்றனர். ஓலையில் இருந்து பாய் முடைதல் முக்கிய தொழிலாக உள்ளது. குருத்தோலைகளை பயன்படுத்தி அழகிய வண்ண பூத்தொப்பிகள், அழகிய கைப்பை மாடலில்  பொருட்கள் வைப்பதற்கான உருண்டை பெட்டிகள் ,அழகிய அஞ்சறைப்பெட்டி, பூப்பெட்டி ,வெற்றிலை கொட்டான் ,என குறைந்த விலையில் அழகிய பனை ஓலை பொருட்கள் இருக்கிறது..                                                                                             
 இந்த தொழிலில் லாபம் இல்லாவிட்டாலும், மன திருப்தியோடு செய்யவேண்டும்.. பனை பொருட்கள் தயாரிப்புக்கு அரசு முக்கியத்துவம் தருவதில்லை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பனை பொருட்களை எல்லோரும் பயன்படுத்த வேண்டும்.இதனால், பயன்களே அதிகம். பனை ஓலை தொப்பிகளை அணிவதால் வெப்பத்தில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. பனை ஓலையின் குளிர்ச்சி உடலுக்கு ஏற்றது. இப்போது, பனை பொருட்களை பயன்படுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதே நேரம், உடலுக்கும், உள்ளத்திற்கும் ஏற்ற பனை பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக கூட்டுறவு சங்கங்களை அரசு ஏற்படுத்த வேண்டும், 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo