Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் உழுந்து சாகுபடியில் அதிக விளைச்சல் எடுப்பது குறித்து வாட்ஸாப் செயலி மூலம் கலந்துரையாடல் 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் உழுந்து சாகுபடியில் அதிக விளைச்சல் எடுப்பது குறித்து வாட்ஸாப் செயலி மூலம் கலந்துரையாடல் 


தூத்துக்குடி 2020 அக்டோபர் 31 ;தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சில வட்டாரங்களில் உழுந்து சாகுபடி முக்கிய பயிராக உள்ளது. குறிப்பாக விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், கோவில்பட்டி போன்ற பகுதிகளில் உழுந்து சாகுபடி அதிகமாக காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதின் அடிப்படையில் விவசாயிகள் உழுந்து சாகுபடி செய்ய தயாராகி வருகிறார்கள். விவசாயிகளுக்கு  உழுந்து சாகுபடியில் உள்ள தொழில் நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்க்காக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் வாட்ஸாப் செயலி மூலம் கலந்துரையாடல் நடைபெற்றது. வாகைக்குளம் வேளாண்மை அறிவியல் மையத்தின் முதன்மை வேளாண் விஞ்ஞானி  முத்துக்குமார் அவர்கள் உளுந்து சாகுபடியில் உள்ள தொழில் நுட்பங்கள் குறித்தும் விவசாயிகளின் கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தார். குறிப்பாக நிலத்தை பண்படுத்துதல், ரக தேர்வு, விதை நேர்த்தி, உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும் விளக்கம் அளித்தார்.  முப்பதிற்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மேலாளர் ஆண்டனி எட்வர்ட் சிங் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் மற்றும்  மற்றும் முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் இலவச அலைபேசி எண்ணின் (1800 419 8800) முக்கியத்துவத்தை பற்றியும் விவசாயம், கால்நடை மற்றும் மீன்வளம் குறித்த சந்தேகங்களை இந்த எண் மூலம் வல்லுனர்களிடம் இருந்து பெற்று கொள்ளலாம் என்றும் விளக்கப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo