Onetamil News Logo

தங்கை  கணவரை  கொன்றவர்  உட்பட  இருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து IIவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு 

Onetamil News
 

தங்கை  கணவரை  கொன்றவர்  உட்பட  இருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து IIவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு 


தூத்துக்குடி 2020 ஜனவரி 22 ; தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்த கோடங்கி முனியசாமி என்பவரின் மகன் முனியசாமி என்ற பொன்முனியசாமியின் (வயது 34) சகோதரியை தூத்துக்குடி அண்ணாநகர் 11வது தெருவைச் சேர்ந்த ஆறுமுகச்சாமி மகன் பாலமுருகன்  (வயது 31/2013) என்பவர் திருமணம் செய்திருந்தார். பின் பாலமுருகனும், அவரது மனைவியும் பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்திருக்கின்றனர்.  
இதனால் 27.10.2013 அன்று தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையத்தில்  பாலமுருகனுக்கும், அவரது மனைவியின் சகோதரரான முனியசாமி என்ற பொன்.முனியசாமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக முனியசாமி என்ற பொன்முனியசாமியும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து பாலமுருகனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். 
இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்த்தில் விசாரணை நடைபெற்று வந்தது.  இன்று(22.01.2020) IIவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு. கௌதமன் அவர்கள் குற்றவாளியான முனியசாமி என்ற பொன்முனியசாமி மற்றும் தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன்(34) ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 1000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo