Onetamil News Logo

இறுதி வாக்காளர் பட்டியலை  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்

Onetamil News
 

இறுதி வாக்காளர் பட்டியலை  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 14 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இறுதி வாக்காளர் பட்டியலை  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று (14.02.2020) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, கலந்து கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன் பின்னர், அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: 
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. ஏற்கனவே, 23.12.2019 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14,18,245 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். பின்னர் நடைபெற்ற சிறப்பு முகாமில் படிவம் 6, 7, 8, 8 ஏ ஆகிய விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு கள ஆய்வு மேற்கொண்டதின் அடிப்படையில் 33,438 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 994 வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் 1,04,715 ஆண் வாக்காளர்களும், 1,08,390 பெண் வாக்காளர்களும்,  இதர 2 வாக்காளர்கள் என 2,13,107 வாக்காளர்களும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,36,839 ஆண் வாக்காளர்களும், 1,42,493 பெண் வாக்காளர்களும்,  இதர 52 வாக்காளர்கள் என 2,79,384 வாக்காளர்களும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,15,631 ஆண் வாக்காளர்களும், 1,22,358 பெண் வாக்காளர்களும்,  இதர 17 வாக்காளர்கள் என 2,38,006 வாக்காளர்களும், திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,07,641 ஆண் வாக்காளர்களும், 1,10,278 பெண் வாக்காளர்களும்,  இதர 6 வாக்காளர்கள் என 2,17,925 வாக்காளர்களும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 1,18,912 ஆண் வாக்காளர்களும், 1,23,524 பெண் வாக்காளர்களும்,  இதர 24 வாக்காளர்கள் என 2,42,460 வாக்காளர்களும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1,27,334 ஆண் வாக்காளர்களும், 1,32,444 பெண் வாக்காளர்களும்,  இதர 29 வாக்காளர்கள் என 2,59,807 வாக்காளர்களும் என தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 7,11,072 ஆண் வாக்காளர்களும், 7,39,487 பெண் வாக்காளர்களும்,  இதர 130 வாக்காளர்கள் என மொத்தம் 14,50,689 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். 
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தேர்தல் வட்டாட்சியர் நம்பிராஜர் மற்றும் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பில் , அக்னல், ரவி, முரளிதரன், முத்துமணி, சிவராமன், வரதராஜ்,ஞானசேகர், மாடசாமி ஆகிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo