Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சம்பள பட்டியலை தயாரிக்க மார்ச் 30, 31, ஏப்ரல் 1 ஆகிய 3 நாட்களில் இரண்டு அல்லது மூன்று ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சம்பள பட்டியலை தயாரிக்க மார்ச் 30, 31, ஏப்ரல் 1 ஆகிய 3 நாட்களில் இரண்டு அல்லது மூன்று ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது ;மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் 


தூத்துக்குடி 2020 மார்ச் 30 ;தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளபடி தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சம்பள பட்டியலை தயாரிக்க மார்ச் 30, 31, ஏப்ரல் 1 ஆகிய 3 நாட்களில் இரண்டு அல்லது மூன்று ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு ; 
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரானோ வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களும் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்கள். மேலும் சமூக இடைவெளியினை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசால் தெரிவிக்கப்பட்டது. 
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானோ வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஊரடங்கு உத்தரவு அமலில் வந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டது.  

 தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளபடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாத இறுதியில் சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள பட்டியலை தயாரிக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் இரண்டு அல்லது மூன்று ஊழியர்களை  மட்டும் மார்ச் 30 மற்றும் மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய மூன்று நாட்களில் சம்பள பட்டியல் தயாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது.  அனுமதியை பெற சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம்  அனுமதி கடிதம் பெற்றுக்கொள்ளலாம். மேலும், MUTHU MAVATTAM APP,  செயலி மூலமும், eoctut@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரானோ வைரஸ் நோய் தொற்று ஏற்படாத வகையில் சமூக இடைவெளி மற்றும் கை கழுவும் வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo