Onetamil News Logo

சென்னை சில்க்ஸ் இரண்டு நாளில் அப்புறப்படுத்தப்பட வேண்டும் இல்லை என்றால் மாநகராட்சி கையகப்படுத்தும்  ;தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் நோட்டீஸ்

Onetamil News
 

சென்னை சில்க்ஸ் இரண்டு நாளில் அப்புறப்படுத்தப்பட வேண்டும் இல்லை என்றால் மாநகராட்சி கையகப்படுத்தும்  ;தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் நோட்டீஸ்


தூத்துக்குடி 2021 ஜனவரி 24 ;சென்னை சில்க்ஸ் இரண்டு நாளில் அப்புறப்படுத்தப்பட வேண்டும் இல்லை என்றால் மாநகராட்சி கையகப்படுத்தும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் நோட்டீஸ் வழங்கி உள்ளார். மேலும் பிரபல நகைக் கடைக்கு சீல் வைக்கவும் திட்டம் இருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன.கோவையில் உள்ள வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. சென்னை சில்க்ஸ் 2020 ல் தீபாவளிக்கு முந்தைய நாள் சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் பேசி திறக்கப்பட்டது.அதற்குப் பிறகு 2021 ல் ஜனவரி மாதத்தில் பொங்கலுக்கு முந்திய நாள் சீல் வைக்கப்பட்டது 
தூத்துக்குடியில் உள்ளூர் திட்ட குழுமம் அனுமதியோடு பார்க்கிங் வசதி இல்லாத பல்வேறு அடுக்குமாடி கட்டிடங்கள் இருக்கிறது. ஆனால் அந்தக் கட்டிடங்கள் மீது உரிமையாளர் மீதும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை ஆனால் தூத்துக்குடியில் சென்னை சில்க்ஸ் அருகில் இருக்கக்கூடிய இடத்தை கட்டாயமாக வாங்க வேண்டும் என்று, அந்த இடத்தின் உரிமையாளர் மிகவும் பிரபல தொழில் அதிபர் என்றும் கூறப்படுகிறது. அந்த இடம் அதிக விலைக்கு விற்பனை  பேசப்பட்டு அவை நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு பல நெருக்கடிகளை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருவதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கிறது. தூத்துக்குடியில் பார்க்கிங் வசதி இல்லாத 100 மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கிறது. தூத்துக்குடியில் தெருவையே ஆக்கிரமித்துக் கொண்டு பல அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறது பல கடைகள் ஆனால் அந்தக் கடைகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் உண்மையிலேயே நேர்மையானவரா? இல்லையா? பொறுத்திருந்து பார்ப்போம், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் பிரபல தொழிலதிபருடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவருக்கு சாதகமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo