Onetamil News Logo

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணி  உறுப்பினர் சேர்க்கை முகாம்:பி. கீதா ஜீவன் எம்.எல்.ஏ. அறிக்கை

Onetamil News
 

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணி  உறுப்பினர் சேர்க்கை முகாம்:பி. கீதா ஜீவன் எம்.எல்.ஏ. அறிக்கை


தூத்துக்குடி ,2019 செப் 12 ;தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணி  உறுப்பினர் சேர்க்கை முகாம்:   இளைஞரணி தோழர்கள் கலந்து கொள்ள வடக்கு மாவட்ட செயலாளர்  பி. கீதா ஜீவன் எம்.எல்.ஏ. அறிக்கை;
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...தி.மு.கழகத்தின் துணை அமைப்பான இளைஞரணிக்கு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 10,000 புதிய உறுப்பினர்கள் வீதம் சேர்த்திட வேண்டும் என்று மாநில இளைஞரணிச் செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது வேண்டுகோளுக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும்; தொகுதிக்கு 10,000 இளைஞர்களை உறுப்பினராக சேர்த்திட வேண்டும் என்ற இலக்கோடு வருகிற 14.09.2019 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற இருக்கிறது.
இந்த முகாமானது தூத்துக்குடி மாநகரத்தில் பாளை ரோடு இராஜாஜி பூங்கா எதிரில் மாநகரச் செயலாளர்; எஸ்.ஆர். ஆனந்த சேகரன் மாநகர இளைஞரணி அமைப்பாளர் எஸ்.பி. ஆனந்த் கபிரியேல் மற்றும் மாநகர துணை அமைப்பாளர்கள் ஏற்பாட்டிலும் விளாத்திக்குளம் பேரூந்து நிலையம் எதிரில் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் ஆர்.வேலுச்சாமி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எஸ்.இம்மானுவேல், எம்.சி. அம்பாசங்கர், ஏ. டேவிட்ராஜ் ஆகியோர் ஏற்பாட்டிலும், கோவில்பட்டி நகரத்தில் பழைய பேரூந்து நிலையம் எதிரில் பயணியர் விடுதி முன்பு கோவில்பட்டி நகர செயலாளர் கா.கருணா மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆர்.கருப்பசாமி, எம்.கே. பிரதீப் ஆகியோர் ஏற்பாட்டிலும்  நடைபெற இருக்கிறது.
மாவட்டச் செயலாளராகிய (பி. கீதாஜீவன்) என்னுடைய தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி. ஜெகன்; பெரியசாமி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.எம். மதியழகன் மற்றும் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மாநகர, நகர, ஒன்றிய பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர், பகுதி கழக இளைஞரணி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறும் இந்த இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு அதிகப்படியான இளைஞரணி தோழர்கள் வருகை தருமாறு இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo