Onetamil News Logo

கொரோனா இல்லா தூத்துக்குடி அமைப்பு சார்பில் சாத்தான்குளம் பகுதியில் 3 நாள் கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கும் முகாம் ;ஏற்பாடு மாற்றுத்திறனாளி G.அந்தோணிராஜ்

Onetamil News
 

கொரோனா இல்லா தூத்துக்குடி அமைப்பு சார்பில் சாத்தான்குளம் பகுதியில் 3 நாள் கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கும் முகாம்;ஏற்பாடு மாற்றுத்திறனாளி G.அந்தோணிராஜ்


சாத்தான்குளம் 2020 ஆகஸ்ட் 7; கொரோனா இல்லா தூத்துக்குடி அமைப்பு சார்பில் சாத்தான்குளம் பகுதியில் 3 நாள் கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கும் முகாம் நடந்தது. 
கொரோனா இல்லா தூத்துக்குடி சாத்தான்குளம் வட்டம் , பிடாநேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களான டி கே சி நகர், சமத்துவபுரம், பிடாநேரி, தைலாபுரம் ஆகிய ஊர்களில் தன்னார்வலர் மாற்றுத்திறனாளி   G.அந்தோணிராஜ் முன்னிலையில் "கப சுரக் குடிநீர்" மற்றும் "சத்து மாத்திரைகள்" சுமார் 1500 பேருக்கு  தொடர்ந்து மூன்று நாட்கள் (03-08-20, 04-08-20, 05-08-20) ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை மெஞ்ஞானபுரம் காவல்துறை ஆய்வாளர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். பிடாநேரி ஊராட்சி தலைவர்  சலேட் மெர்சி , டிகேசி நகர் வார்டு  உறுப்பினர் M.முணிய செல்வி  கலந்து கொண்டு மக்களுக்கு கப சுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கி சிறப்பித்தார்கள். இந்நிகழ்விற்கான அணைத்து ஏற்பாடுகளையும் டி.கே.சி நகரை சேர்ந்த பாஸ்டர். எபனேசர்  மற்றும் பாலன் அவர்கள் செய்து கொடுத்தார்கள். இந்நிகழ்வு மாவட்ட ஆட்சியாளரால் துவக்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo