Onetamil News Logo

செய்தியாளரை தாக்கிய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி S.P. முரளி ரம்பாவிடம் தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் கோரிக்கை மனு

Onetamil News
 

செய்தியாளரை தாக்கிய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி  S.P. முரளி ரம்பாவிடம் தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் கோரிக்கை மனு


தூத்துக்குடி 2019 ஜூன் 21 ; செய்தியாளரை தாக்கிய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி  S.P. முரளி ரம்பாவிடம் தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் கோரிக்கை மனு இன்று வழங்கப்பட்டது.  
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர் முத்துவேல் தட்டார் மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன்  சம்பந்தமாக செய்தி வெளியிட்டதாக நேற்றிரவு கூலிப்படையினரால் அரிவாளால் தாக்கப்பட்டார், இது தமிழக பத்திரிக்கையாளர்களிடையே கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் இன்று  மனு அளிக்கப்பட்டது, மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ரம்பா ,கூறியதாவது..குற்றம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், எனக் கூறினார், மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள தட்டார் மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரனை அடிப்படையில் அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.
"ஜனநாயகத்தின் 4 -வது தூணான பத்திரிக்கையாளர்களுக்கு காவல்துறை எப்போதும் பாதுகாப்பளிக்கும், ஆகவே பத்திரிக்கையாளர்கள் இது போன்ற சமயங்களில் நேரடியாக என்னைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என உறுதியளித்தார்.  
இந்த நிகழ்வில்  தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம்,செயலாளர் பிரபாகர்,பொருளாளர் சீனிவாசகன், இணைச்செயலாளர் ஜாய்சன்,கௌரவ ஆலோசகர் அருண், செயற்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, ஜெகஜீவன், செந்தில் முருகன் ,காட்ஸன், கார்த்திகேயன்  உறுப்பினர்கள் அகமது,  மோகன்,  ராஜ், தனபால், ,, நீதிராஜன், கதிரவன், விஜயகாந்த்,  உள்ளிட்ட பத்திரிகையாளர்கள்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.  
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo