Onetamil News Logo

குடோனில் வைத்திருந்த ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட 750 கிலோ கடல் அட்டைகளை தனிப்படை போலீசார் பறிமுதல் 

Onetamil News
 

குடோனில் வைத்திருந்த ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட 750 கிலோ கடல் அட்டைகளை தனிப்படை போலீசார் பறிமுதல்   


தூத்துக்குடி 2020 ஜனவரி 11 ;தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் உள்ள குடோனில் வைத்திருந்த ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட 750 கிலோ கடல் அட்டைகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். 
இன்று தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில்  வைத்திருந்த பல வகையான கடல் அட்டைகள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை எஸ்.ஐக்கள் ராஜபிரபு, ராஜா மற்றும் தாளமுத்துநகர் போலீசார் சோதனையிட்டனர். 
சோதனையிட்டதில் அந்த குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட சீனி வெள்ளை நூல் அட்டை 500  கிலோவும்,  கருப்பு நூல் அட்டை 150 கிலோவும் மற்றும் வெள்ளை நூல் அட்டை 250 கிலோவும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூபாய் 20 லட்சமாகும். 
இது சம்மந்தமாக கயத்தாறு காந்தாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சொக்கரு மகன் கண்ணன் (43), உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவோதான் குமார் மகன் சைலேந்தர் (26) மற்றும் கான்பூரைச் சேர்ந்த ரமேஷ்குமார் மகன் பிரேம் குமார் (15) ஆகியோரை பிடித்து விசாரணை செய்து, பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் பிடிபட்ட 3 பேரையும் கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்புத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo