Onetamil News Logo

மக்கள் நீதி மய்யம் 3-ம் ஆண்டு விழா   ;தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 

Onetamil News
 

மக்கள் நீதி மய்யம் 3-ம் ஆண்டு விழா   ;தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 21 ; மக்கள் நீதி மய்யம் தொடங்கி 3-வது ஆண்டு தொடங்கியதை முன்னிட்டு, வாக்களித்த மக்களுக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
அரசியலுக்குள் நுழைவதாக அறிவித்த கமல்ஹாசன், கடந்த 2018 ஆம் ஆண்டு, பிப்.21-ம் தேதி, மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கிய ஓராண்டில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம், 3.72 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. நகர்ப்புறங்களில் சில தொகுதிகளில் பிரதான கட்சிகளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது.இருப்பினும், கிராமப்புறங்களில் எதிர்பார்த்த அளவு வாக்குகளைப் பெறவில்லை. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் என எந்தத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. அடுத்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை.
இந்நிலையில், இன்று, மக்கள் நீதி மய்யம் 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுமக்களுக்கு லட்டு வழங்கி சிறப்பித்தார்..சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்ய தென்மண்டல பொறுப்பாளர் டி.பி.எஸ்.பொன்குமரன் பங்கேற்று சிறப்பித்தார்.இதில் தூத்துக்குடி பகுதி பொறுப்பாளர் ஜவஹர் முன்னிலை வகித்தார்.சேகர் ,மணிராஜ் , ஜே.எல்.ஆர் ராஜா ,ஏ.நியூட்டன், எஸ்.சுப்பிரமணி, ஆட்டோ சுப்பிரமணி, சண்டியர் சங்கர், சிலுவைப்பட்டி எஸ்.சந்தானம், இ.தவபுத்திரன் ,டி.சிவகுமார், எஸ்.சிவகுமார், ஏ.மனோ, எம்.மலையழகு,  எம்.ராமநாதன், எம்.மாரித்துரை, எம்.முத்துராமலிங்கம்,ஏ.சக்தி மணிகண்டன், எம்.சதீஸ்குமார், ஜி.பெருமாள்,. இசக்கியப்பன்,என்.ஆனந்த் ,ஏ.மாரியப்பன், எம்.கே.ராஜன், எம்.சங்கர், .செல்வராஜ் ,ஸ்.சுப்ரமணியன்,டி.நாகூர் கனி,பி.சந்திரன், எஸ்.மாணிக்கராஜ், முத்துராமன்,உட்பட பலர் பங்கேற்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo