Onetamil News Logo

அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 22ம் தேதி  முதல் ஆகஸ்ட் 08ம் தேதி  வரை மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் 

Onetamil News
 

அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 22ம் தேதி  முதல் ஆகஸ்ட் 08ம் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் 


தூத்துக்குடி  2019  ஜூலை 18 ; தூத்துக்குடி மாவட்டத்தில் 0-18 வயதுடைய மாற்றுத்திறனாளிகள்; அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 22.07.2019 முதல் 08.08.2019 வரை நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டை, பராமரிப்பு உதவித் தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைகள் பெற விண்ணப்பித்து பயன்பெறலாம். – மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
 
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய கல்வித்திட்டத்தில் வருடந்தோறும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அக்குழந்தைகளுக்காக மருத்துவ முகாம் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் 0-18 வயதுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டை, பராமரிப்பு உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, இரயில் பயண மற்றும் பேருந்து பாதுகாவலர் பயணச் சலுகை சான்று மற்றும் உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம். 
மேலும் எலும்பு, மூட்டு சார்ந்த முடநீக்கியல் அறுவை சிகிச்சை, செயற்கை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சை, உதட்டுப்பிளவு, அன்னப்பிளவு அறுவைசிகிச்சைகள் மற்றும் உட்காது செவிப்பறை மாற்று அறுவைசிகிச்சை (Cochlear Implantation) போன்ற அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவ குழுவினரால் பரிந்துரைக்க கலந்து கொள்ளலாம்.
மேலும் இவ்வாண்டு முகாமில் 1.கை, கால் இயக்க குறைபாடு, 2.தசை சிதைவு இயக்க குறைபாடு, 3.தொழுநோய் இயக்க குறைபாடு, 4.குள்ளத்தன்மை, 5.மூளை முடக்கவாத குறைபாடு. 6.அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர். 7.பார்வைக்குறைபாடு (Low Vision), 8.முற்றிலும் கண்பார்வை இழப்பு, 9.காது கேளாமை, 10.கேட்பதில் மிகவும் சிரமம் (Hard of Hearing), 11.பேச்சில் மற்றும் மொழி குறைபாடு, 12.மனவளர்ச்சிக் குறைபாடு, 13.கற்றல் குறைபாடு, 14.ஆட்டிசக்குறைபாடு, 15.மனநோய் குறைபாடு, 16.நரம்பியல் குறைபாடு, 17.பன்முக நரம்பியல், முதுகு தண்டுவட குறைபாடு (Multiple Sclerosis), 18.பார்க்கின்சன் குறைபாடு, 19.இரத்தம் உறையாமை, 20.தோல் நோய் குறைபாடு (தாலசீமியா), 21.அரிவாள் மரபணு செல் குறைபாடு (Sickle Cell Disease)  போன்ற மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 21 வகை குறைபாடுகளுக்கும் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற கலந்து கொள்ளலாம்.
மாற்றுத்திறனுடையோர் அனைவரும் போக்குவரத்து சிரமமின்றி கலந்து கொள்ள ஏதுவாக அந்தந்த ஒன்றியங்களிலே இம்மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 22.07.2019 அன்று தூத்துக்குடி நகர்புறம் மற்றும் ஊரக ஒன்றியங்களுக்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சிவந்தாகுளத்தில் வைத்து முதல் முகாம் நடைபெறுகிறது. மேலும் 23.07.2019 அன்று சாத்தான்குளம் ஒன்றியத்திற்கு கொம்மடிக் கோட்டை, சந்தோஸ்நாடார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 24.07.2019 அன்று புதூர் ஒன்றியத்திற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிபள்ளியிலும், 25.07.2019 அன்று கோவில்பட்டி ஒன்றியத்திற்கு V.O.C. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 26.07.2019 அன்று ஆழ்வார் திருநகரி ஒன்றியத்திற்கு மாவடிபண்ணை வட்டார வளமையம், அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 29.07.2019 அன்று கருங்குளம் ஒன்றியத்திற்கு செய்துங்கநல்லூர் RC நடுநிலைப்பள்ளியிலும், 31.07.2019 அன்று உடன்குடி ஒன்றியத்திற்கு கிறிஸ்தியா நகரம் தூ.நா.அ.தி.க.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 01.08.2019 அன்று ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்கு V.O.C.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்;ளியிலும், 02.08.2019 அன்று விளாத்திகுளம் ஒன்றியத்திற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 06.08.2019 அன்று திருச்செந்தூர் ஒன்றியத்திற்கு அருள்மிகு திருச்செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 07.08.2019 அன்று கயத்தார் ஒன்றியத்திற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 08.08.2019 அன்று திருவைகுண்டம் ஒன்றியத்திற்கு KGS தொடக்கப்பள்ளியிலும் நடைபெறுகிறது.
இம்முகாமில் கலந்து கொள்ள வரும் மாற்றுத்திறனுடையோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 6, குடும்ப அட்டை நகல், வருமான சான்றிதழ் நகல் (இருப்பின்), தேசிய அடையாள அட்டை நகல் (இருப்பின்), ஆதார் அடையாள அட்டை நகல் (இருப்பின்) மற்றும் பிற மருத்துவ சான்றுகள் (இருப்பின்) கொண்டு வருதல் வேண்டும்.
இம்மருத்துவ முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களுக்கு தேவையான காதொலி கருவி, மூன்று சக்கர வண்டி, தள்ளு வண்டி (Rolator), மூளை முடக்கு வாத குழந்தைகளுக்கான சக்கர நாற்காலி, கார்னர் சேர், ஊன்று கோல், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான புலன் சார் கருவிகள் கொண்ட தொகுப்பு பெட்டி போன்றவற்றையும், கல்வி உதவித்தொகை (1000, 3000, 4000, 6000), பராமரிப்பு உதவித்தொகை (ரூ.1500), 75% பேருந்தில் பயணசலுகை சான்று, ரயில் பயணச்சலுகை சான்று போன்றவற்றையும் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே 18 வயதுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த ஒன்றியங்களில் நடை பெறும் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo